• English
    • Login / Register

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R vs ஹோண்டா CB125 ஹார்னெட்: 125cc பைக் செக்மென்ட்டில் எது பெஸ்ட் ?

    Amogh
    AmoghModified On नवंबर 11, 2026 11:46 pm IST
    info icon
    Published Onनवंबर 10, 2026 02:57 pm IST
    Last Updated Onनवंबर 11, 2026 11:46 pm IST
    4713 Views

    இரண்டு 125cc பைக்குகளில் எதை தேர்வு செய்யலாம் என உங்களுக்கு...

    Xtreme 125R vs CB125 Hornet

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக், புத்தம் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக இடம்பெற்றுள்ள சில பிரத்யேக வசதிகளுடன் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமானது. இந்த பைக், ஹோண்டா CB125 ஹார்னெட்டுடன் எப்படி மோதுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்:

    விலை

    மாடல் 

    விலை 

    மாடல்

    விலை 

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 IBS

    ரூ. 91,500

    ஹோண்டா CB 125 ஹார்னெட் STD

    ரூ. 1,15,485

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ABS

    ரூ. 96,700

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 Dual-Channel ABS

    ரூ. 1,09,550

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 Stealth Edition 

    ரூ. 1,16,250

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம், டெல்லிக்கானவை

    டாப்-ஸ்பெக் வேரியன்ட்டான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஸ்டெல்த் எடிஷனின் விலை, ஹோண்டா CB125 ஹார்னெட்டை விட வெறும் ரூ.765 மட்டுமே அதிகம்.

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R

    Xtreme 125R vs CB125 Hornet

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஸ்டெல்த் எடிஷன் மாடலில் மிகவும் ஸ்போர்ட்டியான LED ஹெட்லைட், மஸ்குலர் ஃபியூயல் டேங்க் மற்றும் கூர்மையான டேங்க் ஷிரவுட்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இவை இந்த பைக்குக்கு ஒரு பெரிய பைக்கிற்கான தோற்றத்தை அளிக்கின்றன. அத்துடன் கவர்ச்சிகரமான புதிய பிளாக் மற்றும் ரெட் கலர் காம்பினேஷனுடன் வரும் இதன் சக்கரங்களும் சிவப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டு பைக்கின் ஸ்போர்ட்டி லுக்கை மேலும் மெருகேற்றுகின்றன.

    Xtreme 125R vs CB125 Hornet

    இந்த பைக்கில் 124.7cc ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 11.4 PS பவரையும், 10.5 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ரைடு-பை-வயர் த்ராட்டில் வசதியுடன் ரெயின், ரோடு மற்றும் ஸ்போர்ட் என மூன்று ரைடிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

    Xtreme 125R vs CB125 Hornet

    சஸ்பென்ஷன் அமைப்பை பொறுத்தவரை, முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக் யூனிட்டும் உள்ளன. 17-இன்ச் சக்கரங்களில் வலம் வரும் இந்த பைக்கின் இரண்டு பக்க சக்கரங்களிலுமே டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

    Xtreme 125R vs CB125 Hornet

    வசதிகள் விஷயத்தில் ஹீரோ அசத்தியுள்ளது. இதில் புளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கால்/SMS அலெர்ட்ஸ் வசதிகள் கொண்ட புதிய 4.2-இன்ச் TFT ஸ்கிரீன் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் TPMS வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக டியூயல்-சேனல் ABS மற்றும் ஹசார்ட் லைட் சுவிட்ச் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

    ஹோண்டா CB125 ஹார்னெட்

    Xtreme 125R vs CB125 Hornet

    ஹோண்டா CB125 ஹார்னெட் பைக்கும் அருமையான ஸ்போர்ட்டி லுக்கைக் கொண்டிருப்பதால், இரண்டில் எது சிறந்தது என்பது தனிநபரின் ரசனையை பொறுத்தது. இதிலும் LED ஹெட்லைட், மஸ்குலர் டேங்க் மற்றும் அக்ரசிவான டேங்க் ஷிரவுட்ஸ் ஆகியவை உள்ளன. இருப்பினும், ஹார்னெட்டில் கொடுக்கப்பட்டுள்ள கோல்டன் நிற இன்வெர்டெட் ஃபோர்க் இந்த பைக்குக்கு கூடுதல் பிரிமியம் தோற்றத்தை தருகிறது.

    Xtreme 125R vs CB125 Hornet

    ஹோண்டா பைக்கில் 123.9cc ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் உள்ளது. இது 11.1 PS பவரையும், 11.2 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. அதாவது எக்ஸ்ட்ரீம் 125R பைக்கை விட 0.3 PS பவர் குறைவு, ஆனால் 0.7 Nm டார்க் கூடுதல் ஆகும். இந்த என்ஜினும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், CB125 ஹார்னெட்டில் எந்தவொரு ரைடிங் மோடுகளும் இல்லை.

    Xtreme 125R vs CB125 Hornet

    சஸ்பென்ஷனுக்கு தங்க நிறத்திலான இன்வெர்டெட் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் அமைப்புடன், 17-இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக்கிங்கைப் பொறுத்தவரை முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

    Xtreme 125R vs CB125 Hornet

    டெக்னாலஜி அம்சங்களில், ஹோண்டா ரோட்சின்க் வசதியுடன் கூடிய 4.2-இன்ச் TFT ஸ்கிரீன் இதிலும் வருகிறது. இதன் மூலம் புளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கால்/SMS அலெர்ட்களைப் பெற முடியும். பாதுகாப்பு அம்சமாக இந்த பைக்கில் சிங்கிள்-சேனல் ABS மட்டுமே கிடைக்கிறது.

    பைக்தேக்கோ சொல்வது...

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மற்றும் ஹோண்டா CB125 ஹார்னெட் ஆகிய இரண்டுமே இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலான ஸ்போர்ட்டியான 125cc கம்யூட்டர் பைக்குகள் ஆகும். இரண்டுமே அட்டகாசமான லுக், நம்பகமான என்ஜின் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் கூடிய TFT ஸ்கிரீன் ஆகியவற்றை கொண்டுள்ளன. இருந்தாலும், ஹீரோ பைக்கில் TPMS, ரைடிங் மோடுகள் மற்றும் டியூயல்-சேனல் ABS போன்ற நவீன அம்சங்கள் கூடுதலாக இருப்பதால், இந்தியாவின் மிக அதிக டெக்னாலஜி வசதிகள் கொண்ட 125cc பைக்குகளில் ஒன்றாக இது தனித்து நிற்கிறது.

    இந்த செக்மென்ட்டிலேயே ஏகப்பட்ட டெக்னாலஜி மற்றும் நவீன வசதிகள் கொண்ட பைக் வேண்டும் என நினைப்பவர்கள் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மாடலை தாராளமாக தேர்வு செய்யலாம். அதே சமயம் முன்பக்கத்தில் பிரிமியமான இன்வெர்டெட் ஃபோர்க் வேண்டும் விலையும் சற்று குறைவாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஹோண்டா CB125 ஹார்னெட் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

     

    User Reviews

    • Hero Xtreme 125R
      Well maintained with no any dent t is present.
      For daily city riding the engine is smooth and responsive. It’s particularly good for overtaking and quick acceleration compared with many conventional 125cc commuters bikes. A practical expectation 50/60 km/l. Brakes and safety. Higher variant get single ABS Channel. Bike have the full safety features that any bike may hardly have.
      Read More
    • Honda CB125 Hornet
      honda cb 125 hornet good looking best milage pillion seat comfort is low and and dual disk and update pillion seat and his bike make segment killer
      This bike has a muscular look and very good headlight. Honda CB 125 Hornet is good-looking, has the best mileage, but the pillion seat comfort is low. Add dual disc and update the pillion seat, and this bike will become a segment killer. Bike quality and placement are best, but the cowl uses plastic; use a metal screw and update the tyre size. When this bike is complete, no bike can compete with this bike.
      Read More
    Was this article helpful ?

    Amogh
    Junior Correspondent
    Amogh Wadikhaye is a Junior Correspondent with the CarDekho Group and an automotive journalist with experience covering motorcycles and the latest industry trends. As a Mechanical.....Read more

    Write your Comment on Hero Xtreme 125R

    Read Full News

    Two Wheelers News

    • Trending
    • Recent

    Trending Bikes

    • Popular
    • Upcoming
    *Ex-showroom price in Delhi
    ×
    We need your city to customize your experience