பல்சர் 180 பைக்குக்கு குட்பை சொன்னதா பஜாஜ்? அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து நீக்கம்!
பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் 180cc...

இந்திய இருசக்கர வாகன சந்தையில் தனக்கென தனி இடம் பிடித்த பஜாஜ் பல்சர் 180 பைக்கின் விற்பனையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது. இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலிருந்து இந்த பைக் தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், ஸ்போர்ட்டி கம்யூட்டர் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய இந்த மாடலின் பயணம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துவிட்டதையே இந்த நடவடிக்கை தெளிவாக உணர்த்துகிறது.
பல்சர் 180 பைக்கை பஜாஜ் நிறுத்தக் காரணம் என்ன?

நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்ததற்கான தெளிவான காரணம் தற்போது வரை வெளிவரவில்லை. இருப்பினும், தற்போதைய பல்சர் மாடல்களின் வரிசையில் பல்சர் 220F மற்றும் பல்சர் 180 ஆகிய இரண்டு மாடல்கள் மட்டுமே இன்னும் எந்தவொரு ரீவேம்ப் அப்டேட்டும் செய்யப்படாமல் பழைய நிலையிலேயே தொடர்வது இதற்கான ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். என்ட்ரி-லெவல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய பல்சர் 125 மற்றும் பல்சர் 150 ஆகியவை களமிறக்கப்பட்டுள்ளன. அதேபோல் பல்சர் N160 SS மாடலானது நவீன தோற்றத்துடனும் கூடுதல் ஸ்போர்ட்டியான அம்சங்களுடனும் கிடைக்கிறது. இன்னும் கூடுதல் பெர்ஃபாமன்ஸ் எதிர்பார்ப்பவர்களுக்கு பல்சர் NS200 சிறந்த தேர்வாக இருக்கும் வேளையில், பெரிய இன்ஜின் பைக் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஆப்ஷனாக பல்சர் N250 SS உள்ளது. பஜாஜின் இந்த மாடல் வரிசையில் பல்சர் 180 பைக்கிற்கான இடம் இன்னமும் காலியாகவே இருக்கிறது. எனவே புதிய தலைமுறை அப்டேட்டுடன் இந்த பைக்கை இன்னும் பிரமாதமாக ரீ-டிசைன் செய்து களமிறக்க பஜாஜ் நிறுவனத்திற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.

இதுவரை விற்பனையில் இருந்த பஜாஜ் பல்சர் 180 மாடலில் 178.6 cc சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் 8,500 rpm-ல் 17 PS பவரையும், 6,500 rpm-ல் 15 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதுடன், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருந்தது. முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் கேஸ்-சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் இடம்பெற்றிருந்தன. பிரேக்கிங் வசதிக்காக முன்பக்கத்தில் 280 mm டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 230 mm டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டிருந்தன. இந்த பைக்கின் மொத்த எடை (kerb weight) 156 கிலோவாகவும், ஃபியூவல் டேங்க் கொள்ளளவு 15 லிட்டராகவும் இருந்தது.
பைக்தேக்கோவின் பார்வை

பஜாஜ் நிறுவனத்தின் வரலாற்றில் பல்சர் 180 மாடலுக்கு எப்போதுமே ஒரு தனித்துவமான இடம் உண்டு. இருப்பினும் இதன் விற்பனை நிறுத்தப்பட்டது பெரிய அளவிலான ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் புதிய பல்சர் மாடல்கள் சிறந்த தொழில்நுட்பம், அதிக பெர்ஃபாமன்ஸ் மற்றும் பல்வேறு பாடி ஸ்டைல்களில் வெளியாகி வருவதால், அவற்றுடன் ஒப்பிடும்போது நவீன அப்டேட்கள் ஏதுமின்றி இருந்த பல்சர் 180 கடும் பின்னடைவைச் சந்தித்தது. அதேநேரத்தில், விற்பனை நிறுத்தப்பட்ட பழைய மாடல்களுக்கு புதிய உயிர் கொடுத்து மீண்டும் களமிறக்குவதில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எப்போதும் கைதேர்ந்த ஒன்று. அந்த வகையில், விரைவில் முற்றிலும் புதிய பொலிவுடன் பல்சர் 180 மீண்டும் மறுபிரவேசம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Bajaj Pulsar 180 User Reviews
- Highway running and special for youthKamal ki power hai isme iske mukable koi bike nhi hai iss segment m thoda sa bss weight jyada hai but usi se confidence aata hai i love this bike jisko 180 k segment main bike khardini ho toh ek baar iss try krein. Ek baar mai isko kedarnath le gya tha koi dikkat nhi hui le jane mein mza bhut aaya mere pass 2 pulsar 125 unka mileage kafi achha hai ab mera trip dehradun ka hoga i hope ride achhi jayegi but ek dikkat lgti h heat jldi ho jati hai. Highway running k liye best and long route k liye leni chahiye bike ye wali aapko or affordable bhi hai mileage bhi thik hai agar silent start hota toh or achha hota but accepted hai i love this bike.Read More7 2
