• English
    • Login / Register

    காசைக் காப்பாற்ற சிஎன்ஜியா? கவலையில்லாத பெட்ரோலா?பஜாஜ் ஃப்ரீடம் 125 VS ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் Xtec! எது பெஸ்ட் ?

    Nishaad
    NishaadModified On अक्टूबर 12, 2026 12:21 pm IST
    info icon
    Published Onअक्टूबर 11, 2026 01:00 pm IST
    Last Updated Onअक्टूबर 12, 2026 12:21 pm IST
    15697 Views

    பழக்கமான மற்றும் பாதுகாப்பான களத்திலேயே தொடரப் போகிறீர்களா...

    Bajaj Freedom 125, Hero Super Splendor XTEC

    பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் இந்தியச் சந்தையில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது விற்பனையில் நல்ல வரவேற்பைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. இருந்தாலும் இது ஒரு சிஎன்ஜி (CNG) பைக் என்பதால் இதன் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்து இன்னமும் பலருக்குச் சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. இதனால் பலரும் பழக்கப்பட்ட, பாதுகாப்பான கம்யூட்டர் பைக்குகளை வாங்கவே விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த செக்மென்டில் மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான தேர்வாகக் கருதப்படும் 'ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் Xtec' பைக்கிற்கு எதிராக பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கை நிறுத்தி இரண்டில் எது சிறந்த தேர்வு என்று விரிவாகப் பார்ப்போம்.

    இரண்டு பைக்குகளின் விலை விவரங்கள் இங்கே:

    விலை & வேரியண்ட்கள்

    பஜாஜ் ஃப்ரீடம் 125

    ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் Xtec

    வேரியண்ட்

    எக்ஸ்-ஷோரூம் விலை

    வேரியண்ட் 

    எக்ஸ்-ஷோரூம் விலை

    NG04 Drum LED

    ரூ. 1,04,058

    டிரம்

    ரூ. 85,448

    NG04

    ரூ. 1,07,159

    டிஸ்க்

    ரூ. 89,044

    NG04 Disc LED

    ரூ. 1,17,499

    -

    -

    • பணத்திற்கான மதிப்பை வழங்கும் விசயத்தில் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் Xtec காரிய சாத்தியமான தேர்வாக அமைகிறது. இதன் ஆரம்ப வேரியண்ட் ரூ. 85,000 எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பிளஸ். உண்மையில் இந்த செக்மென்டிலேயே மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் பைக்குகளில் சூப்பர் ஸ்பிளெண்டரும் ஒன்று.

    • மறுபுறம், உலகின் முதல் சிஎன்ஜி பைக் என்பதால் பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் தயாரிப்புச் செலவு அதிகம். இதன் காரணமாகவே இதன் விலையும் சற்று உயர்வாக உள்ளது. இரு பைக்குகளின் பேஸ் வேரியண்ட்களுக்கு இடையே சுமார் ரூ. 19,000 வித்தியாசம் உள்ளது. டாப் வேரியண்ட்களை ஒப்பிடும் போது இந்த இடைவெளி ரூ. 28,000 வரை அதிகரிக்கிறது.

    • இந்த கூடுதல் பணத்தை வைத்து இந்த செக்மென்ட் பைக்கிற்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பெட்ரோல் போட முடியும். எனவே வெறும் விலையை மட்டும் வைத்துப் பார்த்தால் சூப்பர் ஸ்பிளெண்டர் Xtec மிகத்தெளிவாக வெற்றி பெறுகிறது.

    அளவுகள் மற்றும் டிசைன்

    அளவுகள்

    பஜாஜ் ஃப்ரீடம் 125

    ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் Xtec

    வித்தியாசம்

    நீளம்

    NA

    2042mm

    NA

    அகலம்

    737mm

    729mm (Drum)

    752mm (Disc)

    8/15mm

    உயரம்

    NA

    1092mm

    NA

    சீட் உயரம்

    825mm

    793mm

    32mm

    கிரவுண்ட் கிளியரன்ஸ்

    170mm

    180mm

    10mm

    வீல்பேஸ்

    1340mm

    1267mm

    73mm

    கெர்ப் எடை

    147.8கிகி

    122kg (டிரம்)

    123kg (டிஸ்க்)

    24.8/25.8கிகி

    • பஜாஜ் ஃப்ரீடம் 125 பார்ப்பதற்குச் சிறிய பைக் போலத் தெரிந்தாலும், உண்மையில் இது நீளமாகவும், உயரமாகவும், அதிக எடையுடனும் இருக்கும் ஒரு பைக்காகும். இதன் 825 மி.மீ சீட் உயரம் இந்த செக்மென்டிற்கு சற்று அதிகம். அதிலும் இதன் தடிமனான சீட் டிசைன் காரணமாகக் குறைந்த உயரம் கொண்டவர்கள் கால்களைத் தரையில் ஊன்றுவது சற்று சிரமம்.

    • ஆனால் 73 மி.மீ கூடுதல் வீல்பேஸ் கொண்ட நீண்ட சீட் அமைப்பைக் கொண்டுள்ளதால், ரைடர், பின்னால் அமர்பவர் மற்றும் அவர்களுக்கு இடையே ஒரு பேக் என அனைத்தையும் தாராளமாக வைத்துச் செல்ல முடியும்.

    • பெரிய சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளதால், சூப்பர் ஸ்பிளெண்டரை விட ஃப்ரீடம் பைக் சுமார் 25 கிலோ கூடுதல் எடையைக் கொண்டுள்ளது. இதனால் மெதுவாகச் சென்றாலும் அல்லது வேகமாகச் சென்றாலும் எடையை நன்றாக உணர முடியும். ஸ்பிளெண்டரைப் போல இது மிகவும் இலகுவாக இல்லாவிட்டாலும் கையாள முடியாத அளவிற்கு மோசமாக இல்லை.

    • டிசைனைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்பிளெண்டர் Xtec 2.0 வழக்கமான கம்யூட்டர் பைக் தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஆனால் பஜாஜ் ஃப்ரீடம் 125 பார்க்க மிகவும் ஸ்பெஷலாக பிரீமியமாக மற்றும் சாலையில் செல்லும் போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நவீன டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது.

    வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    அம்சங்கள்

    பஜாஜ் ஃப்ரீடம் 125

    ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் Xtec

    ஸ்டாண்டர்டு எல்சிடி கன்சோல்

    டாப் வேரியண்ட்டில் மட்டும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி

    பயணிக்கும் போதே CNG மற்றும் பெட்ரோலுக்கு மாறும் வசதி

     

    ஃபுல்லி டிஜிட்டல் கன்சோல் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி

    அழைப்பு மற்றும் மெசேஜ் அறிவிப்புகள்

    சர்வீஸ் ரிமைண்டர்

    ரியல்-டைம் மைலேஜ் காட்டி

    LED ஹெட்லைட்

    ஹஸார்ட் லைட்கள்

    டைப்-சி சார்ஜிங் போர்ட்

     

    • ஹீரோ நிறுவனம் சூப்பர் ஸ்பிளெண்டரின் பேஸ் வேரியண்ட்டை நிறுத்திவிட்டு Xtec வேரியண்ட்களை மட்டுமே விற்பனை செய்வதால், டிஜிட்டல் கன்சோல் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகியவை ஸ்டாண்டர்டாகவே கிடைக்கின்றன. இதன் மூலம் கால்/SMS அலர்ட், மைலேஜ் இண்டிகேட்டர், சர்வீஸ் ரிமைண்டர் போன்ற ஏராளமான வசதிகளைக் குறைந்த விலையிலேயே பெற முடிகிறது.

    • பஜாஜ் ஃப்ரீடம் பைக்கில் எல்சிடி கன்சோல் ஸ்டாண்டர்டாக இருந்தாலும், ப்ளூடூத் வசதி டாப் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், அம்சங்களின் எண்ணிக்கையில் சூப்பர் ஸ்பிளெண்டரை விட ஃப்ரீடம் சற்று பின்தங்கியே உள்ளது.

    இன்ஜின்கள்

    Specifications

    பஜாஜ் ஃப்ரீடம் 125

    ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் Xtec

    இன்ஜின் 

    124.6cc air-cooled engine

    124.7cc air-cooled engine

    பவர் 

    9.5PS at 8000rpm

    10.8PS at 7500rpm

    டார்க்

    9.7Nm at 5000rpm

    10.6Nm at 6000rpm

    கியர்பாக்ஸ்

    5-ஸ்பீடு

    5-ஸ்பீடு 

    • என்ஜின் ஆற்றல் மற்றும் டார்க் அளவுகளில் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டரே அதிக புள்ளிகளைப் பெறுகிறது. எடை குறைவாகவும் இருப்பதால், பஜாஜ் பைக்கை விட ஹீரோ பைக் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இயங்கும். நகரத்தின் நெரிசலான சாலைகளில் உடனடியாக முந்திச் செல்ல (Overtake) இதன் என்ஜின் ஆற்றல் சிறப்பாக உதவுகிறது.

    • மறுபுறம், பஜாஜ் ஃப்ரீடம் பைக்கின் என்ஜின் முழுக்க முழுக்க எரிபொருள் சிக்கனத்திற்காகவே (Fuel efficiency) வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் பிக்கப் மற்றும் வேகம் எடுப்பதில் இது சற்று பொறுமையாகவே செயல்படும். இருப்பினும், இந்த என்ஜினின் மிருதுவான இயக்கம் (Smoothness) மிகப்பெரிய பிளஸ். மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சென்றாலும் கூட அதிர்வுகள் இல்லாமல் அமைதியான பயண அனுபவத்தைத் தருகிறது.

    • மைலேஜைப் பொறுத்தவரை ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் Xtec லிட்டருக்கு 75-80 கி.மீ வரை தரும். ஃப்ரீடம் பைக்கும் இதற்குக் கிட்டத் தட்ட இணையான மைலேஜைத் தரும்.

    • ஆனால், ஃப்ரீடம் பைக்கின் மிகப்பெரிய மைனஸ் அதன் குறைந்தபட்ச ரேஞ்ச் (Range) தான். 2 கிலோ சிஎன்ஜி டேங்க் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் மட்டுமே இருப்பதால் சூப்பர் ஸ்பிளெண்டர் அளிக்கும் மொத்த பயண தூரத்தில் பாதியைக்கூட ஃப்ரீடம் பைக்கால் கடக்க முடியாது. அடிக்கடி எரிபொருள் நிரப்ப வேண்டியிருக்கும்.

    முடிவுரை: எதை வாங்கலாம்?

    Bajaj Freedom 125

    இரண்டு பைக்குகளுமே தங்களது பணியை மிகச்சிறப்பாகச் செய்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக எந்த பைக் சிறந்தது என்று பார்த்தால் அது கண்டிப்பாய் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் Xtec தான். குறைவான விலை அதிகப்படியான வசதிகள் வேகமான என்ஜின் எனப் பணத்திற்கு ஏற்ற முழு நிறைவான அனுபவத்தை இது தருகிறது.

    Hero Super Splendor XTEC

    அதேவேளையில் வழக்கமான கம்யூட்டர் பைக்குகளில் இருந்து மாறுபட்டு சாலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஒரு பிரீமியம் தோற்றம் கொண்ட பைக் வேண்டும் என விரும்புபவர்களுக்கு பஜாஜ் ஃப்ரீடம் 125 நல்ல தேர்வு. சிஎன்ஜி தொழில்நுட்பம் தரும் தனித்துவமும் இதன் உயர்தரமான ஃபினிஷிங்கும் கூடுதல் பிரீமியம் உணர்வைத் தருகின்றன. இதற்குச் சற்று கூடுதல் பணம் செலவழிக்கத் தயாராக இருப்பவர்கள் பஜாஜ் பைக்கை தாராளமாகப் பரிசீலிக்கலாம்.

    போட்டியாளர்களுடனான ஒப்பீடு: 

    பஜாஜ் ஃப்ரீடம் 125 VS ஹோண்டா ஷைன் 125: பல வருடங்களாகச் சந்தையில் நிரூபிக்கப்பட்ட மாடல் வேண்டுமென்றால் ஷைன் 125 வாங்கலாம். புதுமையான, அதேசமயம் சிக்கனமான பைக் வேண்டும் என்றால் ஃப்ரீடம் 125 சிறந்த தேர்வு.

    பஜாஜ் ஃப்ரீடம் 125 VS ஹீரோ கிளாமர் 125: கூடுதல் வசதிகள் நிறைந்த பைக் வேண்டுமென்றால் கிளாமர் 125-ஐ தேர்வு செய்யலாம். இல்லையெனில் பஜாஜ் ஃப்ரீடம் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

    பஜாஜ் ஃப்ரீடம் 125 VS பஜாஜ் பல்சர் 125: மென்மையான, மைலேஜ் தரும் கம்யூட்டர் பைக் வேண்டும் என்பவர்கள் ஃப்ரீடமையும், சற்றே ஸ்போர்ட்டியான ரைடிங் அனுபவம் வேண்டும் என்பவர்கள் பல்சர் 125 பைக்கையும் தேர்வு செய்யலாம்.

    பஜாஜ் ஃப்ரீடம் 125 விலை பிரிவில் உள்ள பிற விருப்பங்கள்: பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் விலை உங்களுக்கு அதிகமாகத் தோன்றினால், இதே விலைப் பிரிவில் கிடைக்கும் பிற சிறந்த 5 இருசக்கர வாகனங்களையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

    User Reviews

    • Bajaj Freedom 125
      😉😉😉😉😉😉😉
      The Bajaj Freedom 125 is a great bike for daily commuting. It offers the advantage of CNG, good fuel economy, comfortable riding, and stylish looks. It is a good option for people who travel long distances every day, especially delivery riders. 5/5 rating, Bajaj Freedom .125 CNG Bike, I am happy with my Bajaj Freedom 125.
      Read More
    • Hero Super Splendor XTEC
      bike review
      Very nice and beautiful bike. The repair cost is also not very much. I really like this bike, and the mileage of this bike is also very good. I would suggest buying this bike and riding it. Visually, this bike is very elegant and beautiful. The maintenance cost of this bike is also within my budget, and nothing is much greater than this bike in this segment.
      Read More
    Was this article helpful ?

    Nishaad
    Content Writer
    Nishaad Joshi was a Correspondent with the CarDekho Group with over 3 years of experience covering motorcycles and the Indian two-wheeler industry, now working in a freelance.....Read more

    Write your Comment on Bajaj Freedom 125

    Read Full News

    Two Wheelers News

    Trending Bikes

    • Popular
    • Upcoming
    • TVS Radeon
      TVS Radeon
      Rs 67,100*
      अक्टूबर, 2026 Expected Launch
    • Kawasaki Z300
      Kawasaki Z300
      3,00,000
      अक्टूबर, 2026 Expected Launch
    • Norton Manx
      Norton Manx
      Price to be announced
      नवंबर, 2026 Expected Launch
    • Norton Atlas
      Norton Atlas
      Rs 6,00,000*
      नवंबर, 2026 Expected Launch
    • Bajaj 2026 Pulsar
      Bajaj 2026 Pulsar
      Rs 95,000*
      नवंबर, 2026 Expected Launch
    *Ex-showroom price in Delhi
    ×
    We need your city to customize your experience