• English
    • Login / Register

    மிரட்டும் புது ரெட் லுக்... அறிமுகத்துக்கு தயாரான ஹீரோ கரிஸ்மா XMR 250!

    Amogh
    AmoghModified On अक्टूबर 28, 2026 09:51 pm IST
    info icon
    Published Onअक्टूबर 26, 2026 11:40 am IST
    Last Updated Onअक्टूबर 28, 2026 09:51 pm IST
    17408 Views

    புதிய சிவப்பு நிறம் மிகவும் ஸ்போர்ட்டியாகத் தெரிகிறது. இதே போல...

    XMR 250

    முக்கிய சிறப்பம்சங்கள்:

     

    • விற்பனைக்குத் தயாரான நிலையில் காட்சியளிக்கும் புதிய பைக்

    • புதிய சிவப்பு நிற பெயிண்ட் மற்றும் கோல்டன் நிற இன்வர்டெட் ஃபோர்க் அமைப்பு

    • நடப்பு பண்டிகைக் காலத்தில் சந்தைக்கு வர வாய்ப்பு

    ஹீரோ கரிஸ்மா XMR 250 பைக்கின் தயாரிப்பு நிலை மாடல் மீண்டும் ஒரு டீலர்ஷிப்பில் தென்பட்டுள்ளது. இந்த முறை ஸ்போர்ட்டியான புதிய சிவப்பு நிறத்தில் இது காட்சியளித்துள்ளது. இந்த பைக்கின் முழுமையான விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.

     

    புதிய கலர் ஆப்ஷன்

     

    XMR 250

    இந்த புதிய சிவப்பு நிறமானது இதன் சிறிய மாடலான கரிஸ்மா XMR 210 பைக்கில் உள்ள டர்போ ரெட் நிறத்தை நினைவூட்டினாலும் இரண்டுக்கும் இடையே தெளிவான வித்தியாசத்தைக் காட்டும் வகையில் சில நுட்பமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    XMR 250

    பைக்கின் டேங்க் பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பின் பகுதி ஆகியவை சிவப்பு நிறத்திலும், பக்கவாட்டு பேனலில் XMR பிராண்டிங்குடன் வெள்ளை நிற வேலைப்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. முன் பக்க ஃபெண்டர் வெள்ளை நிறத்திலும், இன்வர்டெட் ஃபோர்க் கோல்டன் நிறத்திலும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. XMR 210 மாடலை விட இதில் பெரிய விண்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளதுடன் முன்பக்க ஃபேரிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விங்லெட்டுகள் பைக்குக்கு அக்ரசிவ்வான ஸ்போர்ட்டி லுக்கைத் தருகின்றன.

     

    முன்னதாக இந்த பைக் கருப்பு நிறத்தில் காணப்பட்ட நிலையில் EICMA 2024 நிகழ்வில் இதன் வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த மாடலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது வெளியாகியுள்ள புதிய சிவப்பு நிறமானது, XMR 250 சீரிஸின் மூன்றாவது வண்ணத் தேர்வாக இணைந்து, இருப்பதிலேயே மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது.

     

    இதுவரை நாம் அறிந்த தகவல்கள்

     

    XMR 250

    ஹீரோ கரிஸ்மா XMR 250 பைக்கில் 250cc, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்படவுள்ளது. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ட்ரீம் 250R பைக்கிலும் இடம்பெற்றிருந்த இதே எஞ்சின் 30.2 PS பவரையும் 25.3 Nm டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த எஞ்சினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளதுடன் இருபுறமும் செயல்படும் பைடிரெக்ஷனல் குயிக்ஷிஃப்டரும் இதில் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

    XMR 250

    ஹார்டுவேர் அமைப்பை பொறுத்தவரையில் இதன் நேக்கட் வெர்ஷனில் உள்ள அதே ட்ரெல்லிஸ் ஃப்ரேமை இந்த பைக்கும் பகிர்ந்து கொள்கிறது. சஸ்பென்ஷன் பணிகளுக்காக முன்பக்கத்தில் இன்வர்டெட் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு பக்கங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்ட 17-இன்ச் வீல்களில் இந்த பைக் பயணிக்கிறது.

     

    புதிய எக்ஸ்ட்ரீம் 250R மாடலை போன்றே, இதிலும் ஃப்ரீக்வென்சி-செலக்டிவ் டேம்பிங் (FSD) தொழில்நுட்பத்துடன் கூடிய மோனோஷாக் அமைப்பைக் காண முடியும்.

     

    XMR 250

    (ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R கன்சோல் படம் குறிப்புக்கு பயன்படுத்தப்பட்டது)

    வசதிகளை பொறுத்தவரை ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் அழைப்பு/SMS எச்சரிக்கைகள் வசதிகளுடன் கூடிய 5-இன்ச் TFT டிஸ்பிளே இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எலக்ட்ரானிக் த்ராட்டில் பாடி, ரைடு மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற எக்ஸ்ட்ரீம் 250R பைக்கில் உள்ள அனைத்து புதிய தொழில்நுட்ப அம்சங்களும் இதிலும் இணைக்கப்பட வாய்ப்புள்ளதால் இது கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த பைக்காக விளங்கும்.

    பைக்தேக்கோவின் கருத்து...

    XMR 250

    குறைந்த சிசி ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் ஹீரோ நிறுவனம் களமிறக்கும் இரண்டாவது மாடலாக இந்த கரிஸ்மா XMR 250 அமையவுள்ளது. முந்தைய XMR 210 சிறப்பான பைக்காக இருந்தபோதிலும் நிறுவனம் எதிர்பார்த்த விற்பனை வெற்றியைப் பெறவில்லை. அந்த நிலையை மாற்றும் நோக்கில் பெரிய எஞ்சின், அதிகப்படியான தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பிரீமியம் ஹார்டுவேர் பாகங்களுடன் இந்த XMR 250 மாடலை கொண்டு வர ஹீரோ திட்டமிட்டுள்ளது.

     

    புதிய எக்ஸ்ட்ரீம் 250R மாடலில் அறிமுகப்படுத்தப்பட்ட ரைடு மோடுகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பல நவீன அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு வெளிவரவுள்ளதால் தனது செக்மென்ட்டிலேயே அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பைக்குகளில் ஒன்றாக கரிஸ்மா XMR 250 இருக்கும்.

     

    இந்த பண்டிகைக் காலத்தில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக் எக்ஸ்-ஷோரூம் விலையில் தோராயமாக 2 லட்சம் ரூபாய் அளவில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. கரிஸ்மா XMR 250 பைக்குக்கு நேரடியாக எந்தவொரு போட்டியாளரும் இல்லை என்றாலும், விலையின் அடிப்படையில் யமஹா R2 மற்றும் கேடிஎம் RC200 போன்ற மாடல்களுக்கு இது கடுமையான போட்டியாக அமையும்.

    Image source

     

     

    Hero Karizma XMR 250 User Reviews

    • M
      mohd on दिसंबर 18, 2024
      4.7
      Karizma xmr 250
      In my family most of the family members you just heroes bikes and scooters and I I have just turn 20 so my family members are planning to give me a bike Karishma xmr 250 would be a perfect bike for me because of the looking and styling I like the tail lights to so I am eagerly waiting for Karizma to launch in India
      Read More
      36 3
    • A
      adarsh on दिसंबर 09, 2024
      4.8
      My first choice hero thanks hero har time update
      I love hero mere ghar me starting se hero ke bick aati rhi hai splendor,hunk, glamour ab Karizma xmr250 ka wait Kiya ja rha hai l love hero apni bick ko har profile ke logo ke hisab se dhalne ke liye♥️♥️♥️♥️♥️♥️♥️💘💘💘💘. Thankyou sooo much Karizma xmr 250 ke liye thankyou
      Read More
      20 3
    • C
      chalamcharla on नवंबर 20, 2024
      5.0
      Stunning and beautiful bike
      Firstly this bike looks stunningly so good ..... it's was so nice to see this with very affordable price, milage also good ... It's really happy to see this kind of bikes are available to us .
      Read More
      14
    • P
      pradhap on नवंबर 14, 2024
      4.5
      Best Karizma bikes
      Quick response super bike super handling Profemence super seat comfortable moliege ok super suspension high stable Colour design poor head light poor
      15
    • M
      md on नवंबर 10, 2024
      5.0
      I LOVE KARIZMA BIKE .
      I LOVE KARIZMA BIKE . BECAUSE I HAVE RIDE OLD KARIZMA WHICH IS LOOKING LIKE A BUSA AND AFTER MANY YEAR I GOT MY DREAM BIKE KARIZMA ON NEW THAT IS XMR
      3 1
    Topics mentioned in the article
    Was this article helpful ?

    Amogh
    Junior Correspondent
    Amogh Wadikhaye is a Junior Correspondent with the CarDekho Group and an automotive journalist with experience covering motorcycles and the latest industry trends. As a Mechanical.....Read more

    Write your Comment

    Read Full News

    Two Wheelers News

    • Trending
    • Recent

    Trending Bikes

    • Popular
    • Upcoming
    *Ex-showroom price in Delhi
    ×
    We need your city to customize your experience