• English
    • Login / Register

    ஹீட்டட் சீட், புது எஞ்சின்.. பெனெல்லி TRK 552 & 552X பைக்குகள் விற்பனைக்கு வந்தது!

    Amogh
    AmoghModified On अक्टूबर 28, 2026 10:50 am IST
    info icon
    Published Onअक्टूबर 23, 2026 03:30 pm IST
    Last Updated Onअक्टूबर 28, 2026 10:50 am IST
    4453 Views

    பழைய TRK 502 பைக்குகளுடன் ஒப்பிடும்போது பெரிய என்ஜின் உடன் வருகிறது

    பெனெல்லி TRK 552

    முக்கிய சிறப்பம்சங்கள்

    • புதிய 554cc பேரலல்-ட்வின் எஞ்சின்

    • புதிய 5-இன்ச் TFT கன்சோல் வசதி

    • குளிர்ச்சியான பகுதிகளில் கூடுதல் சவுகரியத்திற்காக ஹீட்டட் கிரிப்ஸ் மற்றும் ஹீட்டட் சீட் வசதிகள்

    பெனெல்லி நிறுவனம் தனது புதிய TRK 552 மற்றும் TRK 552X பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டெல்லி எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் இதன் தொடக்க விலை ரூ. 7.22 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய TRK 502 மாடல்களோடு ஒப்பிடும்போது, இந்த புதிய அட்வென்ச்சர் டூரர் பைக்குகளில் பெரிய எஞ்சின், அப்டேட் செய்யப்பட்ட ஹார்டுவேர் பாகங்கள் மற்றும் கூடுதலான பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    இந்த இரண்டு மாடல்களுக்குமான புக்கிங் நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பெனெல்லி டீலர்ஷிப்களில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த பைக்குகள் குறித்த விரிவான விபரங்கள் இதோ:

     

    விலை விபரம்

    வேரியண்ட்

    விலை 

    Benelli TRK 552

    ரூ. 7,22,000 

    Benelli TRK 552X

    ரூ. 7,74,000 

    Benelli TRK 552X Limited Edition

    ரூ. 7,90,000 

    அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள்

    டிசைன்

    பெனெல்லி TRK 552 வடிவமைப்பு

    பெனெல்லி TRK 552 மற்றும் TRK 552X பைக்குகள், பழைய TRK 502 சீரிஸின் அதே மஸ்குலர் டிசைன் அமைப்பையே தொடர்கின்றன. இரண்டு பைக்குகளிலுமே ட்வின் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், கம்பீரமான ஃபியூவல் டேங்க் மற்றும் அகலமான ஹேண்டில்பார் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. அதிக வேகத்தில் செல்லும்போது காற்று முகத்தில் நேரடியாக மோதுவதைத் தடுக்க உதவும் உயரமான விண்ட்ஸ்கிரீனும் இதில் உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பைக்குகள் ஒரு அக்மார்க் ADV லுக்கோடு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கின்றன.

     

    வண்ணத் தேர்வுகளைப் பொறுத்தவரை, TRK 552 மாடல் பிளாக் மற்றும் ஒயிட் நிறங்களில் கிடைக்கிறது. TRK 552X மாடல் கிரீன் மற்றும் ஒயிட் வண்ணங்களிலும், TRK 552X லிமிடெட் எடிஷன் மாடல் கண்களைக் கவரும் எடுப்பான எல்லோ நிறத்திலும் விற்பனைக்கு வருகிறது.

     

    எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ்

    பெனெல்லி TRK 552 எஞ்சின்

    இரண்டு பைக்குகளிலுமே புத்தம் புதிய 554cc, லிக்விட்-கூல்டு, பேரலல்-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8,500 rpm-ல் 52 PS பவரையும், 6,500 rpm-ல் 49 Nm டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. பழைய TRK 502 மாடலுடன் ஒப்பிடுகையில், இது 5 PS கூடுதல் பவரையும் 2 Nm கூடுதல் டார்க்கையும் தருகிறது. இந்த எஞ்சின் சிக்ஸ்-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், வேகம் குறைக்கும் போது திடீரென கியரை மாற்றினால் பின்பக்க வீல் லாக் ஆவதைத் தடுக்கும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

     

    சேஸி மற்றும் சஸ்பென்ஷன்

    பெனெல்லி TRK 552 எஞ்சின்

    டியூபுலர் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமுடன் அலுமினியம் ஸ்விங்ஆர்ம் இணைக்கப்பட்டு இந்த பைக்குகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனை பொறுத்தவரை, முன்பக்கத்தில் 50 mm மார்சோக்கி இன்வெர்ட்டட் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ப்ரீலோடு-அட்ஜஸ்டபிள் மோனோஷாக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

     

    இருப்பினும், இரண்டு பைக்குகளுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசமே அவற்றின் வீல் அமைப்பில்தான் உள்ளது. TRK 552 மாடலில் இரண்டு பக்கமும் 17-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன; இது நகர்ப்புறப் பயன்பாட்டிற்கும் நெடுஞ்சாலைப் பயணங்களுக்கும் மிகச் சரியாக பொருந்தும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 190 mm மற்றும் சீட் உயரம் 835 mm ஆகும்.

     

    மறுபுறம், TRK 552X மாடலில் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கேற்ப ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன; இதில் முன்பக்கம் பெரிய 19-இன்ச் வீலும், பின்பக்கம் 17-இன்ச் வீலும் உள்ளன. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் சற்று அதிகமாக 210 mm ஆகவும், சீட் உயரம் 860 mm ஆகவும் இருக்கிறது. இரண்டு பைக்குகளுமே 235 கிலோ எடையைக் கொண்டிருப்பதுடன், நீண்ட தூர பயணங்களுக்காக பெரிய 20 லிட்டர் ஃபியூவல் டேங்கையும் பெற்றுள்ளன.

     

    பிரேக்கிங் அமைப்பைப் பொறுத்தவரை, முன்பக்கத்தில் இரண்டு 320 mm ஃப்ளோட்டிங் டிஸ்க்குகளும், பின்பக்கத்தில் 260 mm டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் பாஷ் நிறுவனத்தின் டூயல்-சேனல் ABS ஸ்டாண்டர்டாக கிடைக்கிறது. டயர்களைப் பொறுத்தவரை, TRK 552 மாடலில் பிரெல்லி டயர்களும், TRK 552X மாடலில் மெட்சலர் அட்வென்ச்சர்-ஸ்பெக் டயர்களும் வழங்கப்பட்டுள்ளன.

    அம்சங்கள்

    TRK 552 அம்சங்கள்

    இரண்டு பைக்குகளிலுமே 5-இன்ச் TFT கன்சோல் உள்ளது. இதில் புளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் அழைப்பு/SMS அலர்ட்கள் போன்ற நவீன வசதிகள் உள்ளன. குறிப்பாக, இதிலுள்ள நேவிகேஷன் சிஸ்டம் ரூட் பிளானிங், டர்ன்-பை-டர்ன் வழிகாட்டுதல், ஆஃப்லைன் நேவிகேஷன் மற்றும் ட்ராக்பேக் போன்ற அம்சங்களை சப்போர்ட் செய்கிறது. இது நீண்ட தூர பைக் பயணங்களை மேற்கொள்பவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

     

    இவை தவிர, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமான TPMS, குளிர் பகுதிகளில் கைகளுக்கு கதகதப்பைத் தரும் ஹீட்டட் கிரிப்ஸ் மற்றும் ஹீட்டட் சீட் போன்ற ஆடம்பர வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ரைடர்கள் தங்களுக்குப் பிடித்த பொசிஷனில் மாற்றிக்கொள்ளும் வகையில் அட்ஜஸ்டபிள் ஹேண்டில்பார் மற்றும் கைகளின் பாதுகாப்பிற்காக நக்கிள் கார்டுகளும் இதில் ஸ்டாண்டர்டாகவே கிடைக்கின்றன.

     

    பாதுகாப்பு வசதிகளுக்காக டூயல்-சேனல் ABS மற்றும் ஹசார்டு லைட் ஸ்விட்ச் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

     

    பைக்தேக்கோவின் கருத்து

     பெனெல்லி TRK 552

    பழைய TRK 502 சீரிஸோடு ஒப்பிடும்போது புதிய பெனெல்லி TRK 552 மற்றும் TRK 552X பைக்குகள் மிகச் சிறந்த மற்றும் அர்த்தமுள்ள பல மாற்றங்களுடன் வந்துள்ளன. கூடுதல் பவருடன் கூடிய பெரிய எஞ்சின் நெடுஞ்சாலைகளில் மிகச் சிறப்பான வேகத்தையும் திறனையும் வெளிப்படுத்தும். அதேசமயம் TFT கன்சோல், ஹீட்டட் கிரிப்ஸ், ஹீட்டட் சீட் மற்றும் TPMS போன்ற கூடுதல் அம்சங்கள் பயணத்தை மிகவும் சொகுசாகவும், பைக்கிற்கு ஒரு பிரீமியம் அந்தஸ்தையும் தருகின்றன.

     

    நகரங்களிலும் திறந்தவெளி நெடுஞ்சாலைகளிலும் அதிகமாக ரைடு செய்ய விரும்புபவர்களுக்கு TRK 552 சிறந்த தேர்வாக இருக்கும். கரடுமுரடான பாதைகளில் செல்லக்கூடிய அட்வென்ச்சர் ரக பைக் மற்றும் கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் எதிர்பார்ப்பவர்களுக்கு TRK 552X மாடல் பக்காவாகப் பொருந்தும்.

     

    இந்திய சந்தையில் இந்த பைக்குகள் ஹோண்டா NX500 மற்றும் BMW F 450 GS ஆகிய பைக்குகளுக்கு நேரடிப் போட்டியாக அமைகின்றன.

    Topics mentioned in the article
    Was this article helpful ?

    Amogh
    Junior Correspondent
    Amogh Wadikhaye is a Junior Correspondent with the CarDekho Group and an automotive journalist with experience covering motorcycles and the latest industry trends. As a Mechanical.....Read more

    Write your Comment on Benelli TRK 552

    Read Full News

    Two Wheelers News

    • Trending
    • Recent

    Trending Bikes

    • Popular
    • Upcoming
    *Ex-showroom price in Delhi
    ×
    We need your city to customize your experience