EICMA 2026-ல் KTM RC450 ஸ்போர்ட்ஸ்பைக் அறிமுகம்: 490 டியூக் எப்போது வரும்? எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் இங்கே
வரவிருக்கும் 490 டியூக் மற்றும் 490 அட்வென்ச்சர் வெளியீடு எப்போது

EICMA 2026 மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் தனது புத்தம் புதிய RC450 மாடலை காட்சிப்படுத்தி, மிடில்வெயிட் ஸ்போர்ட்ஸ்பைக் செக்மென்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது KTM நிறுவனம். அதே வேளையில், இந்நிறுவனத்தின் புதிய 490 cc பேரலல்-ட்வின் என்ஜின் பிளாட்பார்முக்காக ஆவலுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. இந்த புதிய 490 cc பைக்குகள் இன்னமும் உருவாக்க நிலையிலேயே இருப்பதாகவும், இதன் முதல் புரொடக்ஷன் மாடல் அடுத்த ஆண்டுதான் விற்பனைக்கு வரும் என்றும் ஆஸ்திரிய நிறுவனமான KTM அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கேடிஎம் RC450 முற்றிலும் மாறுபட்ட ஒரு ப்ராஜெக்ட்

தற்போது பார்வைக்கு வந்துள்ள புதிய RC450 பைக்கானது CFMoto நிறுவனத்தின் தற்போதைய பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு சீனாவில் தயாரிக்கப்படவுள்ளது. இந்த பைக்கை 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய கேடிஎம் திட்டமிட்டுள்ளது; இருப்பினும் இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி மற்றும் முழுமையான ஸ்பெசிஃபிகேஷன்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதேநேரம், இந்த RC450 மாடலுக்கும் கேடிஎம்மின் எதிர்கால 490 cc பைக் வரிசைக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. ஏனெனில் அந்த 490 cc வரிசையானது முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது.
EICMA 2027-ல் களமிறங்கும் கேடிஎம் 490 டியூக்

கேடிஎம் அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிய 490 cc பேரலல்-ட்வின் என்ஜின் பிளாட்ஃபார்ம் தற்போது அதன் தயாரிப்பு மற்றும் டெவலப்மென்ட்டின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த புத்தம் புதிய என்ஜினுடன் வெளிவரும் முதல் பைக்காக 490 டியூக் மாடல் இருக்கும்; இது EICMA 2027 நிகழ்வில் தனது இறுதி புரொடக்ஷன்-ஸ்பெக் வடிவத்தில் முறைப்படி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 490 அட்வென்ச்சர் பைக் EICMA 2028-ல் காட்சிப்படுத்தப்படலாம். இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களுமே இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளதால், கேடிஎம்மின் எதிர்கால தயாரிப்பு வரிசையில் இது மிக முக்கியமான ஒரு பிளாட்ஃபார்மாகப் பார்க்கப்படுகிறது. மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், புதிய 490cc பைக்குகள் CFMoto-வின் ஆர்க்கிடெக்ச்சரில் இருந்து உருவாக்கப்பட்டவை அல்ல என்பதையும் கேடிஎம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த இரண்டு பிளாட்ஃபார்ம்களுமே முற்றிலும் மாறுபட்டவை மற்றும் தனித்தனி பைக் குடும்பங்களாகவே உருவாக்கப்பட்டு வருகின்றன.
பைக்தேக்கோவின் பார்வை
கேடிஎம் நிறுவனம் தனது மிடில்வெயிட் பைக் வரிசையை நோக்கி என்ன திட்டமிட்டுள்ளது என்பதை இந்த RC450 நமக்கு உணர்த்தினாலும், பல பைக் ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த 490 cc பைக் இதுவல்ல என்பது உண்மைதான். இருப்பினும், 490 டியூக் மற்றும் 490 அட்வென்ச்சர் ஆகிய பைக்குகளின் பணிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து கொண்டிருப்பது ஒரு நல்ல செய்தி; ஆனால் அவை சாலைக்கு வர இன்னும் கொஞ்சம் கூடுதல் காலம் எடுக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
User Reviews
THINKING itI don't see the bike but i think it will be a killer machine, and destroyer of every bike uder 500cc. so it can make a good market in india if it low price and good service and low maintenance then it would be the first mini superbike for every indian middle class family, and in my personal view if it come onroad under 5 lakh then it would segment killer.Read More
