View November Offers
1 min read2.9K Views

ஆப்பிள் மேக்புக் புரோ விலையில் வாங்கக்கூடிய டாப் 5 சூப்பர்பைக்குகள்: லிஸ்ட்ட பாத்தா ஷாக் ஆகிடுவீங்க!

ஃபுல்லி லோடட் மேக்புக் புரோவின் விலையில் நீங்கள் ஒரு கவர்ச்சியான...

இந்திய சந்தையில் தனது புதிய மேக்புக் ப்ரோ சீரிஸை ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடக்க விலையே ரூ. 2.40 லட்சம் என்ற அளவில் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 17.68 லட்சம் வரை எகிறுகிறது. இதில் ஆப்பிள் கேர், பெரிய சார்ஜிங் அடாப்டர் மற்றும் கூடுதல் சாஃப்ட்வேர்களுக்கான செலவு இன்னும் சேர்க்கப்படவில்லை. இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து ஒரு லேப்டாப் வாங்குவதற்கு பதிலாக, அதே பட்ஜெட்டில் என்னென்ன சூப்பரான பைக்குகளை வாங்க முடியும் என்ற யோசனை பலருக்கும் வருவது இயல்புதான். புதிய மேக்புக் ப்ரோவில் 200-க்கும் மேற்பட்ட கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் உள்ளதால் விஷயங்களை எளிமையாக்கும் வகையில் 5 வெவ்வேறு பட்ஜெட் அளவுகளில் லேப்டாப்பிற்கு மாற்றாக என்னென்ன பைக்குகள் கிடைக்கின்றன என்பதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ரூ. 5 லட்சம் பட்ஜெட்

 

14-இன்ச் மேக்புக் ப்ரோ (ஸ்டாண்டர்ட் டிஸ்ப்ளே)

BMW F 450 GS

பவர்டிரைன்

ஆப்பிள் M6 (12-Core CPU, 12-Core GPU)

421 cc லிக்விட்-கூல்டு ட்வின்-சிலிண்டர் எஞ்சின்

மெமரி

32 GB

வாழ்நாள் முழுவதும் சேகரிக்கக்கூடிய இனிமையான பயண நினைவுகள்

ஸ்டோரேஜ்

4TB

பைக்கில் குறைவுதான், ஆனால் பேனியர்கள் மற்றும் டாப் பாக்ஸ்களை மாட்டிக் கொள்ளலாம்

விலை

ரூ. 4, 85,900

ரூ. 4,95,000

இந்த பட்ஜெட்டில் கூடுதல் ஸ்டோரேஜ் மற்றும் மெமரி வசதியுடன் கூடிய ஸ்டாண்டர்ட் 14-இன்ச் மேக்புக் ப்ரோ உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், இதே பணத்திற்கு பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் பைக்கையும் நீங்கள் வாங்கிவிடலாம். இந்த அட்வென்ச்சர் பைக்கின் பேஸ் வேரியண்ட்டாக இருந்தாலும் கூட, எந்தவிதமான கரடுமுரடான சாலைகளிலும் அசால்ட்டாக பயணித்து அட்டகாசமான அனுபவங்களையும், மறக்க முடியாத நினைவுகளையும் அள்ளிக் குவிக்க முடியும். 

அதேசமயம் நீங்கள் எப்போதுமே வீட்டை விட்டு வெளியே வராத, உள்ளரங்கப் பிரியர் என்றால் மட்டுமே இந்த மேக்புக் உங்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும்.

ரூ. 7.5 லட்சம்

 

16-இன்ச் மேக்புக் புரோ (ஸ்டாண்டர்டு டிஸ்பிளே)

ஹோண்டா NX500 E-கிளட்ச்

பவர்டிரைன்

ஆப்பிள் M5 Max (18-Core CPU, 40-Core GPU)

471 cc லிக்விட்-கூல்டு ட்வின்-சிலிண்டர் எஞ்சின்

மெமரி

48GB

எண்ணிலடங்கா நினைவுகள்

ஸ்டோரேஜ்

4TB

ஹார்டு லக்கேஜ் ஆப்ஷன்கள் மூலம் ஏகப்பட்ட இடவசதி

விலை

ரூ. 7,57,900

ரூ. 7,43.900

இந்த விலையில் பெரிய திரையுடன் வேலைகளை சுலபமாக்கும் 16-இன்ச் மேக்புக் ப்ரோவை வாங்கலாம். மறுபுறம், ஹோண்டா NX500 பைக்கில் உள்ள நவீன இ-கிளட்ச் தொழில்நுட்பம், கிளட்ச் பிடிக்கும் அலைச்சலைக் குறைத்து பயணத்தின் அழகிய காட்சிகளை ரசிப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்த உதவும். இது நிஜமாகவே "கூடுதல் மெமரி" என்பதற்கு ஒரு புதுவிதமான அர்த்தத்தைத் தருகிறது அல்லவா?

ரூ. 10 லட்சம்

 

14-இன்ச் மேக்புக் புரோ (புரோ-LED XDR டிஸ்பிளே)

கவாஸாகி Z900

பவர்டிரைன்

ஆப்பிள் M5 Max (18-Core CPU, 40-Core GPU)

948 cc லிக்விட்-கூல்டு இன்லைன்-ஃபோர் எஞ்சின்

மெமரி

128GB

வசீகரமான இன்லைன்-ஃபோர் எஞ்சின் சத்தத்தை ரசிக்கும் எண்ணற்ற தருணங்கள்

ஸ்டோரேஜ்

4TB

பைக்கிற்கு இது தேவையில்லை; ஒரு டேங்க் பேக் இருந்தாலே போதும்

விலை

ரூ. 9,99,000

ரூ. 9,99,000

இந்த பட்ஜெட் ஒரு அட்டகாசமான புள்ளியாகும். இதில் மிகச் சிறந்த டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ப்ரோவை பெற முடியும். அதே தொகையில் காதுகளுக்கு விருந்தளிக்கும் வசீகர எக்சாஸ்ட் சத்தத்தைக் கொண்ட ஜப்பானிய இன்லைன்-ஃபோர் சூப்பர்பைக்கான கவாஸாகி Z900 மாடலையும் சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஜப்பானிய ஃபோர்-சிலிண்டர் பைக்கின் கம்பீர கர்ஜனையைக் கேட்டு ரசித்து வளர்ந்த உங்கள் மனதிற்குள் இருக்கும் பைக் பிரியரை இந்த Z900 நிச்சயம் துள்ளிக்குதிக்க வைக்கும். 

ஆபீஸ் வேலைகளை தீவிரமாகப் பார்க்கும் ஒரு கார்ப்பரேட் ஊழியருக்கு மேக்புக் பயனுள்ளதாகத் தெரியலாம் – ஆனால் தீவிர அவசியமில்லை என்றால் அந்த யோசனையை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த முரட்டு பைக்கை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம்.

ரூ. 14.5 லட்சம்

 

16-இன்ச் மேக்புக் புரோ (புரோ -LED XDR டிஸ்பிளே)

ட்ரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் RX

பவர்டிரைன்

ஆப்பிள் M5 Max (18-Core CPU, 32-Core GPU)

765 cc லிக்விட்-கூல்டு த்ரீ-சிலிண்டர் எஞ்சின்

மெமரி

36GB

ரேஸ் டிராக் நாட்கள் மற்றும் வார இறுதி சவாரி நினைவுகள்

ஸ்டோரேஜ்

16TB

பைக்கில் இது அவசியமே இல்லாத ஒன்று

விலை

ரூ. 14,47,900

ரூ. 13,90,600

இங்கு பட்ஜெட் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. இந்த விலையில் பிரம்மாண்டமான டிஸ்ப்ளே மற்றும் அசுர வேக ஸ்பெசிஃபிகேஷன்களுடன் கூடிய மேக்புக் கிடைக்கும். ஆனால், பைக்குகள் பக்கம் திரும்பினால், ஸ்ட்ரீட் பைக் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒரு முழுமையான ரேஸ் டிராக் பைக்கான ட்ரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் RX மாடலை வாங்கிவிடலாம். நகரத்திற்குள்ளும் ஓட்ட வேண்டும், அதேநேரம் வார இறுதி நாட்களில் ரேஸ் டிராக்கிலும் இறங்கி அதகளம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது கச்சிதமான சாய்ஸ். 

ரூ. 19 லட்சம்

 

16-இன்ச் மேக்புக் புரோ (புரோ-LED XDR டிஸ்பிளே)

டுகாட்டி பனிகேல் V2

பவர்டிரைன்

ஆப்பிள் M5 Max (18-Core CPU, 40-Core GPU)

890 cc V2 எஞ்சின்

மெமரி

128GB

கணக்கில் அடங்காத அளவுக்கு மிக அதிகம்

ஸ்டோரேஜ்

16TB

இல்லை

விலை

ரூ. 18,77,600

ரூ. 19,51,000

இந்த பட்ஜெட்டில் மிகப் பெரிய டிஸ்ப்ளே, அசுர பலம் கொண்ட பிராசஸர், அதிகபட்ச மெமரி, அதிகபட்ச ரேம் மற்றும் பெரிய சார்ஜர், ஆப்பிள் கேர், கூடுதல் சாஃப்ட்வேர் பண்டில்கள் என அனைத்தும் நிறைந்த டாப்-எண்ட் ஆப்பிள் மேக்புக் ப்ரோவை நீங்கள் பெற்றுவிடலாம். 

ஆனால் அதே பட்ஜெட்டில் உலகப் புகழ் பெற்ற இத்தாலிய சூப்பர்பைக்கான டுகாட்டி பனிகேல் V2 மாடலையும் வாங்க முடியும். இந்த பைக்கை எடுத்துக்கொண்டு சாலையில் இறங்கினால், ஒட்டுமொத்த கூட்டமுமே திரும்பிப் பார்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

(அனைத்து பைக்குகளின் விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டவை)

User Reviews

Best bike in my history.

Honestly, the first thing that completely grabs your attention is the massive rear tyre and futuristic styling. It literally feels like something out of a sci-fi movie, and people constantly turn their heads or ask about it at traffic signals.Read More

No words to give bad reviews to triumph is a looking like a wow

One of my favourite bike. When I see the first time and first look, I fall in love with this bike. The most favourite bike in India. I don’t want another bikes because it is my dream bike. I will buy this bike confirm in next 6 months. I love this bike and the performance is good, comfort is also nice.Read More

About the bike

It was my dream bike and it's so reliable and smooth. It has many features, like multiple riding mods and the trophy version has a ERC that means (easy riding clutch) it is very helpful to the beginners. The handling of the bike is very smooth and it gives around 20 to 24 milage on an average in highways and its seats are so much comfortable and it has a heating grips which helps me in early morning rides. I like to recommend this bike to the proper off-road bikers and they love this very much because of its handling and ERC you can also adjust the suspensions of both side and have a good off-road experience. Read More

Share via
SohamSenior Correspondent Follow on Instagram
Soham is a Senior Correspondent with the CarDekho Group. He is an automotive journalist for more than 5 years, specializing in two-wheelers of all kinds. Although a Business Management graduate, he has an immense mechanical understanding. He believes no bike or scooter is inherently bad and should be looked at objectively.
Read More

Trending Bikes

  • Popular
  • Upcoming
Royal Enfield Hunter 350
Rs 1,73,646* Onwards
Hero Splendor Plus
Rs 93,169* Onwards
Royal Enfield Classic 350
Rs 2,28,285* Onwards
Hero Splendor Plus XTEC
Rs 96,380* Onwards
Bajaj Pulsar NS200
Rs 1,74,100* Onwards
*Ex-showroom price in Delhi