• ROYAL ENFIELD
  • CLASSIC 350
  • Price
  • Images
  • Compare
  • Specs
  • Colours
  • Classic 350 EMI
  • User Reviews
  • Mileage
  • More
View November Offers
1 min read781 Views

ரசனைக்கு ஏத்த மாதிரி ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கை ஃபேக்டரியிலிருந்தே மாடிஃபை பண்ணலாம்! எப்படி தெரியுமா?

கஸ்டம் சீட்கள் முதல் ஒவ்வொரு பேனலுக்கும் வெவ்வேறு பெயிண்ட்...

ஒரு ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கைப் பார்த்துவிட்டு, "நல்லாத்தான் இருக்கு, ஆனா இன்னும் கொஞ்சம் என் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி இருந்தா சூப்பரா இருக்குமே" என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? அப்படியானால், ராயல் என்ஃபீல்டு உங்கள் குரலைக் கேட்டுவிட்டது என்றே தெரிகிறது. ஆஃப்டர்மார்க்கெட் கஸ்டமைசேஷன் சிக்கல்களுக்குள் செல்லாமலேயே, வாடிக்கையாளர்கள் தங்களது கிளாசிக் 350 பைக்கிற்குத் தனிப்பட்ட டச் கொடுப்பதற்கு இந்த பிராண்டின் ஃபேக்டரி கஸ்டம் புரோகிராம் உதவுகிறது.

Explore Royal Enfield Classic 350 in Detail
Royal Enfield Classic 350₹ 1,88,934* Onwards
View More Details

ஃபேக்டரி கஸ்டம் புரோகிராம் என்னென்ன வழங்குகிறது?

கிளாசிக் 350 (டூயல்-சேனல் ABS வேரியன்ட்கள் மட்டும்) பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை விடக் கூடுதலாக ரூ.50,000 செலுத்தினால், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சுவாரசியமான கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. பல கலர் தேர்வுகள், வித்தியாசமான கிராபிக்ஸ், சீட்டிற்கான பல்வேறு லெதர் ஷேடுகள் மற்றும் வித்தியாசமான பேட்ஜிங் ஆப்ஷன்கள் ஆகியவை இதில் அடங்கும். ராயல் என்ஃபீல்டு ஏராளமான அக்சஸரிஸ்களையும் வழங்குகிறது, ஆனால் அவற்றிற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். 

ஆனால் இங்கேதான் விஷயம் இன்னும் சுவாரசியமாகிறது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பாடி பேனலுக்கும் வெவ்வேறு கலர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்; இதன் மூலம் உண்மையிலேயே தங்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு தனித்துவமான மோட்டார்சைக்கிளை உருவாக்க முடியும். எனவே, வழக்கத்திற்கு மாறான கலர் காம்பினேஷனில் ஒரு கிளாசிக் 350 பைக்கை வாங்க வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது ஆசைப்பட்டிருந்தால் உங்கள் கற்பனைக்குச் செயல் வடிவம் கொடுக்க இதுவே சரியான வாய்ப்பு.

இதில் இன்னொரு அழகான சிறப்பம்சமும் உள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் தாங்கள் தேர்ந்தெடுத்த கலர் ஸ்கீமிற்கு ஒரு தனித்துவமான பெயரைப் பெறுவார்கள். இது வெறும் பெயிண்ட் வேலையைத் தாண்டி அவர்களின் மோட்டார்சைக்கிளுக்கு ஒரு தனி அடையாளத்தைக் கொடுக்கிறது.

ஒரு நீண்ட செயல்முறை

ராயல் என்ஃபீல்டின் டிசைன் டீமுடன் அப்பாயிண்ட்மென்ட் புக் செய்வதற்காக வாடிக்கையாளர் ஆன்லைனில் ரூ.5,000 டோக்கன் தொகையைச் செலுத்திப் பதிவு செய்வதிலிருந்து இந்தச் செயல்முறை தொடங்குகிறது. டிசைன் டீமுடனான சந்திப்புகள் முடிந்த பிறகு ஃபேக்டரி கஸ்டம் ஸ்லாட்டை உறுதி செய்வதற்காக புக்கிங் தொகையாக ரூ.15,000 (திரும்பப் பெற முடியாதது) செலுத்தக் கேட்கப்படும். இருப்பினும் புக்கிங் தொகையைச் செலுத்திய பிறகு பைக்கை கேன்சல் செய்ய நீங்கள் முடிவு செய்தால் அதையும் செய்யலாம். ஆனால் அப்பாயிண்ட்மென்ட் மற்றும் புக்கிங் தொகை திரும்பக் கிடைக்காது.

இந்த ஃபேக்டரி கஸ்டம் புரோகிராம் இரண்டு கான்ஃபிகரேஷன்களில் கிடைக்கும். இரண்டிலுமே கீழ்க்கண்டவை கிடைக்கும்: 

  • LED ஹெட்லேம்ப் மற்றும் பைலட் லேம்ப், டைப் C USB சார்ஜிங் பாயிண்ட்

  • பிளாக் இன்ஜின் / பாலிஷ்டு இன்ஜின், ஸ்போக் வீல்கள் / அலாய் வீல்கள்

  • பெயிண்ட்கள், டெக்கால்கள், பேட்ஜ்கள், சீட்கள், சீட் ரெக்சின்கள் மற்றும் தையல் நூல் கலர்கள்

இருப்பினும் கான்ஃபிகரேஷன் 2 ஒரு படி மேலே சென்று: அட்ஜஸ்டபிள் லீவர்கள், LED இண்டிகேட்டர்கள் மற்றும் டிரிப்பர் பாட் ஆகியவற்றைக் கூடுதலாகச் சேர்க்கிறது.

கான்ஃபிகரேஷன் 1 விலை ரூ.2,62,370 ஆகவும் கான்ஃபிகரேஷன் 2 விலை ரூ.2,71,179 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விலைகளிலும் பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையும் அடங்கும். 

முந்துபவருக்கே முன்னுரிமை! 

இருப்பினும் இதில் ஒரு முக்கியமான நிபந்தனை உள்ளது. ஃபேக்டரி கஸ்டம் புரோகிராம் மூலம் மாதத்திற்கு 15 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படும். மேலும் டிசைன் டீமுடனான முதல் சந்திப்பு சென்னையில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஃபேக்டரியில் நடைபெறும். ஆம் உங்கள் பயண மற்றும் தங்குமிடச் செலவுகள் அனைத்தையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இந்த கஸ்டமைசேஷன் செயல்முறை ஒரே இரவில் முடிந்துவிடும் விஷயமும் அல்ல. உங்கள் ரசனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கிளாசிக் 350 தயாராவதற்குச் சுமார் நான்கு மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கும்.

பைக்தேக்கோவின் கருத்து

எல்லாவற்றையும் அலசிப் பார்க்கும்போது கூடுதலாக ரூ.50,000 செலவு என்பது உங்கள் மோட்டார்சைக்கிளைத் தனித்து நிற்க வைப்பதற்கான மலிவான வழி நிச்சயமாக அல்ல. ஆனால் ஆஃப்டர்மார்க்கெட் வழிக்குச் சென்று பைக்கின் வாரண்டியையோ அல்லது சட்டப்பூர்வ அங்கீகாரத்தையோ பாதிக்காமல் ஒரு முழுமையான மேக்ஓவர் செய்ய விரும்பினால், இதைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். இறுதியில் தங்களது ராயல் என்ஃபீல்டு பைக்குகள் இன்னும் கொஞ்சம் தனித்துவமான ஆளுமையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இதுவே சரியான தேர்வாக இருக்கும்.

Royal Enfield Classic 350 User Reviews

S
srijan on नवंबर 17, 2026
4.7
A Bike loved by all

Very excellent bike, my dad owns the bike and even i ride the bike the feelings of riding a classic is like literally wow, performance is also pretty good, the looks are totally amazing, I really love classic 350. Read More

A
avishek on नवंबर 02, 2026
5.0
very good bike

Very nice bike. I'll like to buy one more from the royal enfield. Bullet 350, royal enfield classic 350 both are my favourite and I like hunter 350 also as well as shotgun 650 and meteor 350. I like to tell royal enfield about my dream bike which is Royal Enfield GT 650. I'll purchase soon, This bike's performance is great.Read More

H
harish on अक्टूबर 20, 2026
5.0
Great choice for anyone who loves classic 350

Best looking bike with single seat, smooth refined comfortable for all types of riding. Overall good mileage and also depends on riding style. Best for the one who loves classic looks . And single seat is really eye catching. Overall best good looking bike with good mileage, comfort and solid road presence. Read More

K
khushal on अक्टूबर 10, 2026
5.0
RE Classic 350

Yes, I will recommend this bike as it's the best machine I have ever rode, so calm and relaxed and gives you a royal vibe and you will want to ride this bike as long as its possible, just get it, Thanks! Read More

L
lokesh on अगस्त 31, 2026
4.8
"My Classic - Safe Classic

This is office to home riding bike hardly it taken for long drive, and it never done major accidents after 4th reguler service vehicle is moving like a fluffy queen pillow, and having special lovable number plate and i never fell down or succumbed to any major accident i feel very safe even when i ride this on pothole roads.Read More

Share via
AmeyCorrespondent Follow on Instagram
Amey is a Correspondent with the CarDekho Group and has been an automotive journalist for over 3 years. A business graduate by paper but an automotive enthusiast by heart, Amey has been in love with automobiles ever since he can remember. He loves anything and everything on wheels, but is obsessed with bikes, and is always on the lookout for his next great adventure.
Read More

Trending Bikes

  • Popular
  • Upcoming
KTM 160 Duke
Rs 2,11,195* Onwards
KTM 200 Duke
Rs 2,36,954* Onwards
Royal Enfield Hunter 350
Rs 1,73,646* Onwards
Hero Splendor Plus
Rs 94,418* Onwards
Royal Enfield Classic 350
Rs 2,28,285* Onwards
*Ex-showroom price in Delhi