பிரேக்கிங்: இந்தியாவில் வெளியானது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 125 -வது ஆண்டு பதிப்பு
பிரத்யேகமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இதுவும் ஒன்று......

முக்கிய சிறப்பம்சங்கள்
- நிறம் மாறும் சிறப்பு பெயிண்ட் அமைப்பைப் பெற்றுள்ளது
- மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவுமின்றி கிளாசிக் 650 மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது
- இந்தியாவில் வெறும் 125 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும்
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 650 125த் அனிவர்சரி எடிஷன் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லிமிடெட் எடிஷன் ராயல் என்பீல்டு பைக் 125 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது. இதைப் பற்றிய முழுமையான விவரங்களை கீழே காணலாம்:
விலை மற்றும் கிடைக்கும் விபரங்கள்
ராயல் என்பீல்டு கிளாசிக் 650 -யின் 125-வது அனிவர்சரி எடிஷனின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ₹4,25,589 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 16, 2026 அன்று பிற்பகல் 2 மணி முதல் தொடங்கியது. இந்த முன்பதிவு அக்டோபர் 28, 2026 அன்று விற்பனை தொடங்கும் நாள் வரை திறந்திருக்கும். இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே புக் செய்ய முடியும். வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 2026 முதல் பைக்கின் டெலிவரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன சிறப்பு?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 125 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இந்த 125த் அனிவர்சரி எடிஷன் சிறப்பு மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ராயல் என்பீல்டு கிளாசிக் 650 மாடலின் அடிப்படையில் உருவான இதில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், பெரிய டியர்டிராப் வடிவ ஃபியூயல் டேங்க் மற்றும் இரட்டை பீஷூட்டர் எக்ஸாஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஆனால் இதன் பிரதான சிறப்பம்சமே இதன் ஹைப்பர்ஷிஃப்ட் பெயிண்ட் கலர் தான். பைக்கின் மீது வெளிச்சம் விழும் கோணத்திற்கு ஏற்ப சிவப்பு, பச்சை மற்றும் தங்க நிறங்களுக்கு இடையே இதன் வண்ணம் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சைடு பேனல்களில் தங்க நிறத்தில் 125 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் பேட்ஜிங், டேங்கில் கைகளால் வரையப்பட்ட பின்ஸ்ட்ரைப்ஸ் மற்றும் ப்ரவுன் நிற குயில்டெட் சீட் ஆகியவை சேர்க்கப்பட்டு பைக்கிற்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கின்றன.

இன்ஜின் கவர், எக்ஸாஸ்ட், வீல்கள் மற்றும் பிற அண்டர்பின்னிங்ஸ் உள்ளிட்ட அனைத்து குரோம் பாகங்களும் முழுமையாக பிளாக்-அவுட் செய்யப்பட்டு, பைக்கிற்கு ஒரு அட்டகாசமான ஸ்டீல்த் லுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 125 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், ராயல் என்பீல்டு வரிசையிலேயே மிகவும் அரிய மற்றும் தனித்துவமான மாடலாக இது இருக்கும்.
பைக்தேக்கோ சொல்வது...

மெக்கானிக்கல் அம்சங்களைப் பொறுத்தவரையில் இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக் வழக்கமான கிளாசிக் 650 மாடலை அப்படியே ஒத்துள்ளது. மாற்றங்கள் அனைத்தும் இதன் கலர் மற்றும் டிசைன் சார்ந்த விவரங்களில் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இதில் 47 PS பவரையும் 52 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 649cc பேரலல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டு, 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து ஹார்டுவேர் மற்றும் அம்சங்களும் எந்த மாற்றமுமின்றி அப்படியே தொடர்கின்றன.
கிளாசிக் 650 மாடலின் டாப் வேரியண்ட்டான பிளாக் குரோம் பதிப்பின் விலை ₹3,82,097 (எக்ஸ்-ஷோரூம், சென்னை) ஆகும். அதைவிட இந்த அனிவர்சரி எடிஷன் ₹43,492 கூடுதல் விலையில் கிடைக்கிறது. இதன் பிரத்யேக பெயிண்ட் மற்றும் குறைவான எண்ணிக்கை காரணமாக, பைக் சேகரிப்பாளர்கள் மற்றும் ராயல் என்பீல்டு ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். எனவே இந்த சிறப்பு பைக்கை வாங்க விரும்பினால், புக்கிங் தொடங்கியதும் முந்திக் கொள்வது நல்லது!
Royal Enfield Classic 650 User Reviews
- The royal Enfield classic 650The royal Enfield classic 650 is one of those bikes that makes you stop and stare before you even turn the key. The moment you fire it up, the parallel-twin engine greets you with a smooth but deep exhaust note. Out on the roads, the bikes pulls strongly in mid-range. Cruising at 90-100 km/h feels effortless, and you can tell this machine is built to stretch its legs on highway. The 6- speed gear box shifts clean, and the assist clutch makes life a bit easier in traffic, though the lever itself is still on the heavier sideRead More5 2
- Best bike no wordsItS amazing To have an RE smooth ride satisfying sound and to top maintainance and servicing might be a little hectic living in a village but the on road price and fuel consumption suprising but adjustable the performance is amazing with satisfying sound and a balanced handling all i can say is it's wonderful to have such a bike for myselfRead More3
- Royalty on road.Royal enfield classic 650 this is the royalty on road like feel which provide 50Nm torque which is quite impressive for this price bracket this royal beat has 600+ cc there engine which is quite stable to use for daily usage like office in cities. I was using it for my daily usage and this provide me quite impressive comfortable ride.Read More
- Excellent bikeThe classic 650 is beautiful retro style motor cycle with a smooth 648cc parallel twin engine it is comfortable cruise with a refind ride but it is 243kg weight can be hardful at low speed it is great upgrade for classic fans it has dual channel abs and good suspension It is very good bike i have seen in RERead More2
- Loving the bike scinceLoving the bike scince my teenage and dreaming to buy it ! It’s looks and road presence is very good and setting poster are very comfortable and performance are unbeatable at this prices range bikes ! Thanks to tha Royal Enfield company ! You are the best you are creating many peoples dream and ! Making them happy by the custmers satisfactionsRead More1