Login
Language
  • NORTON
  • Images
  • Compare
  • User Views
  • FAQ's
1 min read2.2K Views

தமிழ்நாட்டில் உருவாகும் பிரிட்டிஷ் பைக்! நார்ட்டனின் 450cc ரோட்ஸ்டர் பைக் அறிமுக தேதி இதோ!

இந்தியாவின் 500cc-க்கு உட்பட்ட ரோட்ஸ்டர் பைக் சந்தையில் நார்ட்டன்...


முக்கிய சிறப்பம்சங்கள்

 

  • முற்றிலும் புதிய சிங்கிள்-சிலிண்டர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும்

  • ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 பைக்குக்கு போட்டியாக களமிறங்கும்

  • 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு

 

நார்ட்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய 450cc சிங்கிள்-சிலிண்டர் ரோட்ஸ்டர் பைக்கை மிலனில் நடைபெறவுள்ள EICMA 2026 நிகழ்வில் காட்சிப்படுத்த உள்ளது. முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் தயாராகும் இந்த புதிய பைக், 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த முழுமையான விவரங்கள் இதோ:

 

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?


புதிதாக வரவிருக்கும் நார்ட்டன் 450cc ரோட்ஸ்டர் பைக்கில் 450cc லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது சுமார் 40 முதல் 45 PS பவரையும், 40 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இதில் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் இடம்பெறலாம்.

 

எச்-சீரிஸ் என அழைக்கப்படும் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் தயாராகும் முதல் மாடலாக இந்த புதிய பைக் இருக்கும். எதிர்காலத்தில் இதே பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி மேலும் பல பைக்குகளை அறிமுகப்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

டிசைனைப் பொறுத்தவரை நார்ட்டன் பிராண்டிற்கே உரித்தான கிளாசிக் ஸ்டைலிங்கைத் தக்கவைத்துக்கொண்டு நியோ-ரெட்ரோ மாடலாக இது உருவாக்கப்படலாம். பிரீமியம் ஃபினிஷிங் மற்றும் பல ரெட்ரோ கலர் ஆப்ஷன்களில் இது விற்பனைக்கு வரக்கூடும்.

 

மேலும் இதில் 17-இன்ச் வீல்கள், 8-இன்ச் TFT டச்ஸ்கிரீன், ரைடிங் மோட்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக் ரைடிங் எய்ட்ஸ் ஆகியவை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

 

இருப்பினும் இந்த அம்சங்கள் குறித்து நார்ட்டன் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Explore Upcoming Norton 450 in Detail
Norton 450₹ 3,50,000*
Alert Me when LaunchedExpected Launch Date - फ़रवरी, 2027

இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?


நார்ட்டன் தனது புதிய ரோட்ஸ்டர் பைக்கை இந்தியாவிலும் சர்வதேச சந்தைகளிலும் ஒரே நேரத்தில் 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக நார்ட்டன் இந்தியா நிறுவனம் 2027 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் அட்லஸ் மாடல்களையும், அதைத் தொடர்ந்து மேங்க்ஸ் மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

 

இந்த புதிய ரோட்ஸ்டர் பைக் தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் உற்பத்தி ஆலையில்தான் தயாரிக்கப்பட உள்ளது.

பைக்தேக்கோவின் கருத்து...

புதிதாக வரவிருக்கும் இந்த ரோட்ஸ்டர் பைக் நார்ட்டன் பிராண்டின் ஆரம்ப ரக பைக்காக இருக்கும். மேலும் இது ட்வின்-சிலிண்டர் கொண்ட நார்ட்டன் அட்லஸ் மற்றும் V4 இன்ஜின் கொண்ட நார்ட்டன் மேங்க்ஸ் கார்களுக்குக் கீழே பொசிஷன் செய்யப்படும். இருப்பினும், இந்தியாவில் தற்போதைய GST 2.0 வரி விகிதங்கள் காரணமாக இதன் 350cc போட்டி பைக்குகளை விட இதன் விலை அதிகமாகவே இருக்கும் இது நார்ட்டனுக்கு சற்றே சவாலாக அமையலாம்.

 

இதைச் சமாளிக்கும் விதமாக, டிவிஎஸ்-நார்ட்டன் நிறுவனம் இந்த பைக்கில் உயர்தரமான ஹார்டுவேர் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளை வழங்கி 500cc-க்கு உட்பட்ட ரோட்ஸ்டர் பிரிவில் இதைத் தனித்து நிற்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சந்தையில் அறிமுகமான பிறகு, இது ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 பைக்குக்கு நேரடியாகப் போட்டியாக இருக்கும்.

 

ஆதாரம்: ஆட்டோகார் இந்தியா

 

Topics mentioned in the article
Share via
AmoghJunior Correspondent Follow on Instagram
Amogh Wadikhaye is a Junior Correspondent with the CarDekho Group and an automotive journalist with experience covering motorcycles and the latest industry trends. As a Mechanical Engineering graduate, he specialises in automotive news reporting and getting into finer details of bikes and scooters. He is passionate about motorsports and enjoys working on his own bikes. His technical knowledge helps him better understand two-wheelers, and he strives to make that knowledge accessible and enjoyable for readers.
Read More

Trending Bikes

  • Popular
  • Upcoming
Hero Splendor Plus
Rs 93,169* Onwards
Royal Enfield Hunter 350
Rs 1,73,646* Onwards
Royal Enfield Classic 350
Rs 2,28,285* Onwards
Hero Splendor Plus XTEC
Rs 96,380* Onwards
Yamaha R15 V4
Rs 2,01,538* Onwards
*Ex-showroom price in Delhi