1 min read6.2K Views

ரெட்ரோ பிரியர்களுக்கு செம ட்ரீட்: EICMA 2026-ல் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ கிளாசிக் பைக்!

கிளாசிக் பைக் ரசிகர்களுக்கு இது ஒரு சூப்பர் ட்ரீட்

EICMA 2026 மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ரெட்ரோ ஸ்டைலும் நவீன கால டச்சும் கலந்த ஒரு அட்டகாசமான ஆர்ட்டிஸ்டிக் பைக் கான்செப்டை ஹீரோ மோட்டோகார்ப் பார்வைக்கு வைத்துள்ளது. இதன் பாடி முழுக்க க்ரோம் மற்றும் காப்பர் பினிஷிங் கொடுக்கப்பட்டு, பார்த்த உடனே கவரும் தனித்துவமான தோற்றத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இதன் ஃபியூயல் டேங்க் கிளாடிங் பிரான்ஸ் பினிஷிங்கில் கலைநயமிக்க டிசைனுடனும், கம்பீரமான ஹீரோ பிராண்டிங்குடனும் வடிவமைக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.


இதன் முன்பக்க ஃபோர்க்கில் ஸ்பிரிங் பாகங்கள் வெளியே தெரியும் வகையில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது மோட்டார்சைக்கிளுக்கு தனித்துவமான அடையாளத்தைத் தருவதோடு, ஒட்டுமொத்த அழகையும் அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்கிறது.


 பைக்கின் என்ஜின் கேசிங்கில் "பாரத் மே கல்பித்" என ஹிந்தியில் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது "இந்தியாவில் உருவானது" என்பதை உணர்த்தும் வகையில், இந்த பைக் முழுமையாக இந்திய தயாரிப்பு என்பதை இந்த வாசகம் பறைசாற்றுகிறது. 

இதன் ஹெட்லைட்டில் ஒரு அட்டகாசமான டிசைன் ரகசியம் ஒளிந்துள்ளது. இதில் உள்ள DRLs ஹீரோ நிறுவனத்தின் லோகோவை நினைவூட்டும் வகையில் 'H' வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. 


இந்த பைக்கின் என்ஜின் விவரங்கள், சேஸி உள்ளிட்ட மெக்கானிக்கல் அம்சங்கள், விற்பனைக்கு எப்போது வரும் என்பது போன்ற எந்தவொரு தகவலையும் ஹீரோ மோட்டோகார்ப் இதுவரை வெளியிடவில்லை. சொல்லப்போனால், இந்த கான்செப்ட் மாடல் உற்பத்திக்கு வருமா இல்லையா என்பதே கூட இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும், ஹீரோவின் வரலாற்றில் இதுவொரு தலைசிறந்த கிளாசிக் படைப்பாகவே பார்க்கப்படுகிறது. 

இதுமட்டுமின்றி, இதே EICMA 2026 நிகழ்வில் ஒரு ஸ்கிராம்பிளர் கான்செப்ட் பைக்கையும் ஹீரோ காட்சிப்படுத்தியுள்ளது. அந்த ஸ்கிராம்பிளர் 250 கான்செப்ட் பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள எங்களது பிரத்யேக செய்திக் கட்டுரையைப் படியுங்கள்.

Topics mentioned in the article
Share via
Basu Follow on Instagram
Basu Sivaraj is an economist by education and an automotive enthusiast at heart, a national racer with hands-on experience in demanding, competitive riding conditions. His journey spans from fixing bikes in a garage to competitive riding, endurance off-road events, and real-world testing.
Read More

Trending Bikes

  • Popular
  • Upcoming
Royal Enfield Hunter 350
Rs 1,73,646* Onwards
Hero Splendor Plus
Rs 93,169* Onwards
Royal Enfield Classic 350
Rs 2,28,285* Onwards
Hero Splendor Plus XTEC
Rs 96,380* Onwards
Bajaj Pulsar NS200
Rs 1,74,100* Onwards
*Ex-showroom price in Delhi