Login
Language
1 min read2K Views

வருகிறதா புதிய BS7 உமிழ்வு விதிமுறைகள்: உங்க பைக், ஸ்கூட்டருக்கு என்ன ஆகும்?

BS7 உமிழ்வு விதிமுறைகள் பைக்குகளுக்கு பொருந்துமா...

ஐரோப்பிய ஒன்றியத்தின் 'யூரோ 7' (Euro 7) விதிகளுக்கு இணையான BS7 (Bharat Stage VII) மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை வரும் ஏப்ரல் 2029 முதல் இந்தியாவில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை மாசுபாட்டைக் கடுமையாகக் கட்டுப்படுத்தவும் உமிழ்வைக் கண்காணிக்கும் முறையை வலுப்படுத்தவும் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இருப்பினும், இருசக்கர வாகனங்களுக்கான அமலாக்கக் காலம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்த புதிய விதிகளுக்கான காலக்கெடுவிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இது குறித்த வரைவு அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் என்ன?

இந்தியாவில் தற்போது ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வந்த BS6.2 (Bharat Stage VI Phase 2) மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வாகன எஞ்சினில் இருந்து வெளிவரும் நைட்ரஜன் ஆக்சைடுகள், ஹைட்ரோகார்பன்கள், கார்பன் மோனாக்சைடு மற்றும் துகள்கள் போன்ற நச்சு வாயுக்களின் அளவை இந்த விதிகள் கட்டுப்படுத்துகின்றன. முன்பு இருந்த BS4 விதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் சல்ஃபர் அளவு 50 ppm வரை இருந்த நிலையில், BS6 நிலைக்கு மாறியபோது அது 10 ppm ஆகக் குறைக்கப்பட்டது. இந்த குறைந்த அளவிலான சல்ஃபர் மேம்படுத்தப்பட்ட உமிழ்வு கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

தற்போது வரவிருக்கும் BS7 விதிகளில் இந்த வரம்புகள் மேலும் கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வாகனங்களில் இருந்து வெளியாகும் அதிநுண்ணிய மாசுத் துகள்களைக் கட்டுப்படுத்துதல், நிஜ உலகச் சூழலில் ஏற்படும் உமிழ்வு மற்றும் வாகனத்தின் முழு ஆயுட்காலம் முழுவதும் மாசுபாட்டைக் கண்காணித்தல் ஆகியவற்றிற்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் தரத்தில் எந்த மாற்றமும் தேவையிருக்காது!

முன்பு BS4 விதிகளில் இருந்து BS6 நிலைக்கு மாறியபோது எரிபொருளின் தரத்தை உயர்த்த சுத்திகரிப்பு நிலையங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் தற்போதைய தகவல்களின்படி, BS7 நிலைக்கு மாறுவதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் தரத்தில் மீண்டும் புதிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியமிருக்காது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருளின் தரத்தை மாற்றுவதை விட வாகனங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இருப்பினும் புதிய விதிகளுக்கு ஏற்ப வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் புதிய வாகனங்களின் எஞ்சின் மற்றும் உமிழ்வு கட்டுப்பாட்டு அமைப்புகளை அப்கிரேடு செய்ய வேண்டி இருக்கும். இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை அரசு அறிவிக்கவுள்ள இறுதி உமிழ்வு வரம்புகளைப் பொறுத்து எஞ்சின் அளவுத்திருத்தம், ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், கேட்டலிடிக் கன்வெர்ட்டர்கள் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற மாற்றங்களைச் செய்ய வேண்டி வரலாம்.

இருசக்கர வாகனங்களுக்கான அமலாக்கம் இன்னும் அறிவிக்கப்படவில்லை!

இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரையில் இந்த BS7 விதிகளின்படி நிஜ உலக ரைடிங் சூழல்களில் பல்வேறு மூலங்களில் இருந்து வெளியாகும் புகையைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். மேலும் புழக்கத்தில் உள்ள வாகனங்களை ஆய்வு செய்தல் மற்றும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் சந்தைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல் போன்ற திட்டங்களும் இதில் அடங்கும்.

இருசக்கர வாகனங்களுக்குத் தேவையான சோதனை முறைகள் மற்றும் ஹார்டுவேர் மாற்றங்கள் குறித்த துல்லியமான விவரங்கள் அரசு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகே முழுமையாகத் தெரியவரும்.

தற்போது BS6 இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் கவலைப்பட வேண்டுமா?

தற்போது சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு எந்தவித உடனடி மாற்றமும் பரிந்துரைக்கப்படவில்லை. எனவே ஏற்கனவே உள்ள BS6 வாகன உரிமையாளர்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. புதிய BS7 விதிகள் நடைமுறைக்கு வருவதால் மட்டுமே, உங்கள் BS6 பைக் மற்றும் ஸ்கூட்டர்களை மாற்ற வேண்டியதோ அல்லது அப்கிரேடு செய்ய வேண்டியதோ இல்லை. இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் தேதிக்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு மட்டுமே இவை பொருந்தும்.

வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

BS7 மாற்றமானது இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களை மேலும் தூய்மையான எஞ்சின்கள் மற்றும் திறம்படச் செயல்படும் உமிழ்வு கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்கத் தூண்டும். ஆனால் பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான அமலாக்கத் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால் புதிய வாகனம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் அவசரப்படவோ அல்லது பயப்படவோ தேவையில்லை. BS6.2 அமலுக்கு வந்தது போல இது மிக விரைவாக உடனடியாக அமல்படுத்தப்படாது. இந்த புதிய திட்டமானது 2035 வரை கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளதால் வாகன உற்பத்தியாளர்களுக்கும் சோதனை முகமைகளுக்கும் ஆயத்தமாகப் போதிய கால அவகாசம் கிடைக்கும்.

புதிய பைக், ஸ்கூட்டர் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இது என்ன உணர்த்துகிறது?

எனவே புதிய இருசக்கர வாகனம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின் மாற்றத்தைக் குறித்து கவலைப்படாமல் தாராளமாக தங்கள் திட்டத்தை முன்னெடுக்கலாம். அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடனேயே இதற்கான முழுமையான காலக்கெடு மற்றும் விதிமுறைகள் தெளிவாகத் தெரியும்.

அந்த வகையில் இந்த தீபாவளிப் பண்டிகைக்கு நீங்கள் ஒரு புதிய ஸ்கூட்டரை வாங்க யோசித்துக்கொண்டிருந்தால் சமீபத்தில் அறிமுகமான டாப் 5 புதிய ஸ்கூட்டர்களின் விவரங்களை நீங்கள் பரிசீலிக்கலாம்

Source

Share via
PranavCorrespondent Follow on Instagram
Pranav Singh Rawat is a Correspondent with the CarDekho Group, covering motorcycles, emerging mobility trends, and the Indian two-wheeler industry. A Mechanical Engineering graduate, he combines technical expertise with a rider-first perspective to create engaging and informative automotive content. Passionate about all kinds of motorcycles, from sportbikes to adventure tourers, he brings real-world riding experience and industry insights to his work, helping enthusiasts and buyers make informed decisions.
Read More

Trending Bikes

  • Popular
  • Upcoming
Hero Splendor Plus
Rs 90,199* Onwards
Royal Enfield Classic 350
Rs 2,15,915* Onwards
Royal Enfield Hunter 350
Rs 1,59,656* Onwards
Hero Splendor Plus XTEC
Rs 95,310* Onwards
Yamaha R15 V4
Rs 2,00,468* Onwards
*Ex-showroom price in Delhi