• English
    • Login / Register

    கைல தீபாவளி போனஸ் காசு இருக்கா? உங்க பைக்குக்காக ரூ. 5,000-க்குள் வாங்க சிறந்த 10 பொருட்கள்

    Amogh
    AmoghModified On अक्टूबर 19, 2026 10:23 pm IST
    info icon
    Published Onअक्टूबर 19, 2026 05:00 pm IST
    Last Updated Onअक्टूबर 19, 2026 10:23 pm IST
    1807 Views

    தீபாவளி போனஸ் பணத்தை எப்படி புத்திசாலித்தனமாகச் செலவிடலாம்

    தீபாவளி போனஸ்

    தீபாவளி பண்டிகை வந்தாச்சு உங்களுக்கு இந்த பண்டிகைக் காலத்தில் ரூ. 5,000 வரை போனஸ் கிடைத்துள்ளது என்றால், ரைடிங் கியர்கள் முதல் பயனுள்ள ஆக்சஸரீஸ்கள் வரை நீங்கள் வாங்கக்கூடிய 10 சிறந்த பொருட்கள் இதோ:

    ECE சான்றிதழ் பெற்ற ஹெல்மெட் 

    தீபாவளி போனஸ்

    ஒரு பைக் ரைடர் வாங்க வேண்டிய மிக முக்கியமான ரைடிங் கியர் சிறந்த ஹெல்மெட் ஆகும். ஹெல்மெட் வாங்கும்போது, அது தலைக்கு சரியாகப் பொருந்துகிறதா மற்றும் நல்ல காற்றோட்ட வசதி உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். பாதுகாப்பு சான்றிதழைப் பொறுத்தவரை ISI கட்டாயம் இருக்க வேண்டும், அதனுடன் ECE 22.06 சான்றிதழும் இருந்தால் இன்னும் சிறந்தது.

     

    எங்களது பரிந்துரை SMK டைஃபூன் அல்லது ஆக்சர் அபெக்ஸ் ஆகும். இந்த ஹெல்மெட்கள் ISI சான்றிதழுடன் ECE 22.06 சான்றிதழையும் பெற்றுள்ளன. மேலும் பல வண்ண ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன.

    ரைடிங் ஜாக்கெட்

    Diwali bonus

    ரைடிங் ஜாக்கெட் வாங்கும்போது எப்போதும் தகுந்த ஆர்மர் பாதுகாப்போடு, உராய்தலைத் தாங்கும் மெட்டீரியல் மற்றும் சௌகரியமான ஃபிட்டிங் உள்ளதா என்று பார்க்க வேண்டும். ரூ. 5,000-க்குள் நீங்கள் பரிசீலிக்கக்கூடிய இரண்டு சிறந்த ஆப்ஷன்கள் சோலஸ் த்ரிஃப்ட் மற்றும் க்ராம்ஸ்டர் வைப்பர் ஆகும்.

    ரைடிங் கிளவ்ஸ்

    தீபாவளி போனஸ்

    ரைடிங் கிளவ்ஸ் ஹேண்டில்பாரை கெட்டியாகப் பிடிப்பதற்கு உதவுவதோடு, விபத்து ஏதும் ஏற்படும் பட்சத்தில் கைகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது. ரூ. 5,000-க்குள் வாங்க வயாடெர்ரா ஹோல்ஷாட் மற்றும் க்ராம்ஸ்டர் K2K ஆகியவை நல்ல தேர்வுகளாகும்.

    ரைடிங் பேன்ட்ஸ்

    தீபாவளி போனஸ்

    உங்களிடம் நல்ல ஹெல்மெட், ஜாக்கெட் மற்றும் ரைடிங் கிளவ்ஸ் இருந்தால் அடுத்து நீங்கள் வாங்க வேண்டியது ஒரு நல்ல ரைடிங் பேன்ட் ஆகும். இந்த விலை வரம்பில் தார்மேக் டிரைஃப்ட் மற்றும் ரைடா டிரெயில் கிராஃப்ட் ஆகியவற்றை நீங்கள் செக் செய்து பார்க்கலாம்.

    ரைடிங் பூட்ஸ்

    தீபாவளி போனஸ்

    தினசரி பயணங்களுக்கு சாதாரண ஷூக்கள் போதுமானதாக இருந்தாலும் பிரத்யேக ரைடிங் பூட்ஸ் மட்டுமே கால் விரல்கள் மற்றும் கணுக்கால் போன்ற குறிப்பிட்ட பகுதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்குகின்றன. எங்கள் கணிப்பில், இந்த விலைப் பிரிவில் ரைடா டூரர் பூட்ஸ் மற்றும் TVS ரேசிங் ஆங்கிள்-லென்த் பூட்ஸ் ஆகியவை பரிசீலிக்க ஏற்ற சிறந்த தேர்வுகளாகும்.

    போர்ட்டபிள் டயர் இன்ஃப்ளேட்டர்

    தீபாவளி போனஸ்

    போர்ட்டபிள் டயர் இன்ஃப்ளேட்டர் என்பது ஒவ்வொரு பைக் வைத்திருப்பவரிடமும் இருக்க வேண்டிய ஒரு பயனுள்ள ஆக்சஸரி ஆகும். வீட்டிலோ அல்லது பயணங்களின் போதோ டயர் பிரஷரை செக் செய்து சரியான அளவில் பராமரிக்க இது பெரிதும் உதவும்.

    பேடாக் ஸ்டாண்ட்

    தீபாவளி போனஸ்

    உங்கள் பைக்கில் நீங்களே வேலை செய்ய விரும்பினால், ஒரு பேடாக் ஸ்டாண்ட் வாங்குவது அன்றாட பராமரிப்பு பணிகளை எளிதாக்கும், முக்கியமாக உங்கள் பைக்கில் சென்டர் ஸ்டாண்ட் இல்லாத பட்சத்தில் இது மிகவும் பயனுள்ளதாகும். இது பின்புற வீலை தரையிலிருந்து தூக்க உதவுவதால், செயினை கிளீன் செய்வதும் லூப்ரிகேட் செய்வதும் மிகவும் சுலபமாகும்.

    போர்ட்டபிள் பிரஷர் வாஷர்

    தீபாவளி போனஸ்

    வீட்டிலேயே பைக்கை சுலபமாக வாஷ் செய்வதற்கு போர்ட்டபிள் பிரஷர் வாஷர் ஒரு சிறந்த வழியாகும். இது வாஷிங் சென்டர்களுக்குச் செல்ல வேண்டிய தேவையை நீக்குவதுடன், உங்களுக்கு வசதியான நேரத்தில் நீங்களே பைக்கை வாஷ் செய்து கொள்ள முடியும்.

    என்ட்ரி-லெவல் புளூடூத் இன்டர்காம்

    தீபாவளி போனஸ்

    நீங்கள் வழக்கமாக நண்பர்களுடன் சேர்ந்து ரைடு செல்பவர் என்றாலோ அல்லது ரைடிங் செய்யும்போது பாட்டு கேட்க பிடிக்கும் என்றாலோ புளூடூத் இன்டர்காம் ஒரு பயனுள்ள முதலீடாகும். என்ட்ரி-லெவல் ஆப்ஷன்கள் வழக்கமாக ரூ. 2,000-லிருந்து தொடங்குகின்றன. இருப்பினும், எங்களது தேர்வு ஈஜியாஸ் V6 புரோ+ அல்லது ஈஜியாஸ் Q8 ஆகும்.

    முழுமையான மோட்டார்சைக்கிள் டூல்பாக்ஸ்

    தீபாவளி போனஸ்

    சிறு பராமரிப்பு மற்றும் சிறிய அட்ஜஸ்ட்மென்ட்டுகளுக்காக மெக்கானிக்கிடம் செல்லாமல் வீட்டிலேயே செய்வதற்கு மோட்டார்சைக்கிள் டூல்பாக்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஸ்பேனர்கள், சாக்கெட் ரென்ச்ச்கள், ஆலன் கீ செட்கள் மற்றும் ஸ்க்ரூடிரைவர்கள் அடங்கிய கிட்டை பார்த்து வாங்கலாம்.

     

    Was this article helpful ?

    Amogh
    Junior Correspondent
    Amogh Wadikhaye is a Junior Correspondent with the CarDekho Group and an automotive journalist with experience covering motorcycles and the latest industry trends. As a Mechanical.....Read more

    Write your Comment

    Read Full News

    Two Wheelers News

    • Trending
    • Recent

    Trending Bikes

    • Popular
    • Upcoming
    • Kawasaki Z300
      Kawasaki Z300
      Rs 3,00,000*
      अक्टूबर, 2026 Expected Launch
    • Norton Manx
      Norton Manx
      Price to be announced
      नवंबर, 2026 Expected Launch
    • Norton Atlas
      Norton Atlas
      Rs 6,00,000*
      नवंबर, 2026 Expected Launch
    • Bajaj 2026 Pulsar
      Bajaj 2026 Pulsar
      Rs 95,000*
      नवंबर, 2026 Expected Launch
    • Norton Manx R
      Norton Manx R
      Rs 30,00,000*
      नवंबर, 2026 Expected Launch
    *Ex-showroom price in Delhi
    ×
    We need your city to customize your experience