Login
Language
  • HERO
  • Images
  • User Views
  • FAQ's
1 min read6.1K Views

வெயிட்டிங் முடிஞ்சது! மிரட்டலான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 டீசர் வெளியானது!

புதிய எக்ஸ்பல்ஸ் -க்கான காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது

Explore Upcoming Hero XPulse 421 in Detail
Hero XPulse 421₹ 2,85,000*
Alert Me when LaunchedExpected Launch Date - मार्च, 2027

முக்கிய அம்சங்கள்:

 

  • EICMA 2026 மோட்டார் ஷோவில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 காட்சிப்படுத்தப்பட வாய்ப்புள்ளது

  • எக்ஸ்பல்ஸ் 210 மாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய தோற்றம்

  • அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரலாம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் பைக்கை சுட்டிக்காட்டும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு புதிய டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில் ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் பிரிவின் 450 cc ரேலி பைக்குகள் இடம்பெற்றிருந்தாலும் அதன் தலைப்பில் எக்ஸ்பல்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருப்பது இந்த புதிய எக்ஸ்பல்ஸ் 421 மாடலின் வருகையைத் தான் உறுதிப்படுத்துகிறது.

 

 

இந்த புதிய பைக் குறித்து இதுவரை நமக்குக் கிடைத்துள்ள முழுமையான தகவல்கள்:

 

எக்ஸ்பல்ஸ் 421 பைக்கில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

 


ஹீரோ தயாரிப்புகளிலேயே அதிக பவர் கொண்ட அட்வென்ச்சர் பைக்காக இந்த எக்ஸ்பல்ஸ் 421 வரவிருக்கிறது. லடாக்கில் சோதனை ஓட்டத்தில் இருந்தபோதே இந்த பைக் கேமராக்களில் சிக்கியதால், இதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்த தெளிவான பார்வையும் கிடைத்துவிட்டது.

 

தோற்றத்தைப் பொறுத்தவரை ஹீரோ நிறுவனம் ஏற்கனவே இதன் டிசைனுக்கான பேடன்ட்டை பதிவு செய்துவிட்டது. தற்போதைய எக்ஸ்பல்ஸ் மாடல்களைப் போல அல்லாமல், ஆஃப்-ரோடு சாகசப் பயணங்களுக்கு ஏற்ப மிகவும் கம்பீரமாகவும், பெரிய அளவிலும் இந்த பைக் காட்சியளிக்கிறது.

 

இன்ஜின் திறனைப் பார்த்தால் இதில் முற்றிலும் புதிய 421cc லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொடுக்கப்படலாம். இதன் துல்லியமான பவர் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும், எக்ஸ்பல்ஸ் 210 மாடலை விட மிகச் சிறந்த டூரிங் மற்றும் கடுமையான ஆஃப்-ரோடு அனுபவத்தை இது வழங்கும் என்று தாராளமாக நம்பலாம்.

 

ஹார்டுவேர் அமைப்பில் முன்பக்கம் 21 இன்ச் மற்றும் பின்பக்கம் 17 இன்ச் ஸ்போக் வீல்களுடன் இந்த பைக் வருகிறது. இந்த வீல்களில் மெட்ஸெலர் டூரான்ஸ் டூயல் பர்பஸ் டயர்கள் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கம் அட்ஜஸ்ட் செய்ய முடியாத ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் ஆகியவை வழங்கப்படலாம்; அதேநேரம் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் வசதியுடன் கூடிய டாப் வேரியண்ட்களும் வரக்கூடும்.

 

வசதிகள் பட்டியலில் முழுமையான எல்இடி விளக்குகள், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன் வசதி கொண்ட பெரிய TFT டிஸ்பிளே ஆகியவை முக்கிய இடம்பிடிக்கும். இதன் மூலம் அழைப்புகள், மெசேஜ் அலர்ட்கள் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனை எளிதாகப் பெற முடியும். இதுதவிர ரைடு-பை-வயர் த்ராட்டில், குவிக்ஷிஃப்டர், ட்ராக்ஷன் கண்ட்ரோல், டூயல் சேனல் ABS மற்றும் பல்வேறு ரைடிங் மோடுகளும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

 

அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் EICMA 2026 நிகழ்வில் எக்ஸ்பல்ஸ் 421 மாடலை ஹீரோ நிறுவனம் உலகளவில் முதன்முதலாகக் காட்சிப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை 2027-ல் துவங்கலாம் என்றும், எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.2.85 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சந்தைக்கு வரும்போது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 மற்றும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆகிய பைக்குகளுக்கு நேரடிப் போட்டியாக இது அமையும். எனினும் இதன் முழுமையான ஸ்பெசிஃபிகேஷன்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவந்த பின்னரே களத்தில் இந்த பைக் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்பது தெரியவரும்.

Hero XPulse 421 User Reviews

L
lucky on नवंबर 29, 2024
5.0
Excellent its mileage is good

Excellent its mileage is good body is good all of above it have good performance in the the way of satisfaction in pure

S
shashank on अक्टूबर 20, 2024
4.5
Ride comfort

It's good and well ride comfort to passanger it's low price and low maintenance charges make it easier to survive and maintain

B
binayak on सितंबर 02, 2024
4.5
Bike dekho super review

Superb bike waiting for it eagerly thankful to bike dekho .com for providing such information towards bike enthusiastic

G
gangadhar on जनवरी 24, 2024
5.0
Great Experience

The riding experience is truly classic, resembling a powerful and timeless journey. It's highly recommended for adventurous off-roading, offering both exhilaration and budget-friendly accessibility.Read More

A
arun on जुलाई 21, 2023
4.3
Amazing Vehicle

The X Pulse 400 is a true adventure companion! Its powerful 400cc engine delivers thrilling performance on and off the road, making every ride an exhilarating experience. The bike's sturdy build and responsive handling provide confidence while tackling various terrains. The comfortable seating and ergonomic design ensure long journeys are a breeze. Advanced features like ABS and digital instrumentation add a modern touch. However, some may find it a bit heavy for city commuting. Overall, the X Pulse 400 impresses with its versatility, offering an excellent blend of excitement, functionality, and reliability for adventure enthusiasts.Read More

Topics mentioned in the article
Share via
Basu Follow on Instagram
Basu Sivaraj is an economist by education and an automotive enthusiast at heart, a national racer with hands-on experience in demanding, competitive riding conditions. His journey spans from fixing bikes in a garage to competitive riding, endurance off-road events, and real-world testing.
Read More

Trending Bikes

  • Popular
  • Upcoming
Royal Enfield Hunter 350
Rs 1,73,646* Onwards
Hero Splendor Plus
Rs 93,169* Onwards
Royal Enfield Classic 350
Rs 2,28,285* Onwards
Hero Splendor Plus XTEC
Rs 96,380* Onwards
Yamaha R15 V4
Rs 2,01,538* Onwards
*Ex-showroom price in Delhi