• English
    • Login / Register

    கார்களைத் தொடர்ந்து இந்தியாவில் களமிறங்கும் 3 வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா ?

    Amey
    AmeyModified On नवंबर 18, 2026 10:50 pm IST
    info icon
    Published Onनवंबर 17, 2026 12:49 pm IST
    Last Updated Onनवंबर 18, 2026 10:50 pm IST
    4593 Views

    பேட்டரி-ஸ்வாப்பிங் மற்றும் ரிமூவபிள் பேட்டரிகள் மூலம், மற்ற...

    VinFast Evo, Kyo & Kinet-Based Scooters Coming To India Soon

    முக்கியச் சிறப்பம்சங்கள்:

    • ஈவோ, கியோ மற்றும் கைனெட் ஆகிய மாடல்களை அடிப்படையாகக் கொண்ட மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வின்ஃபாஸ்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடும்.

    • 2027 மார்ச் அல்லது அதற்குப் பிறகு இவை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கழட்டி மாற்றக்கூடிய பேட்டரிகள் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பம் ஆகியவை இவற்றின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.

    கார்களைத் தொடர்ந்து, வியட்நாம் ஜாம்பவானான வின்ஃபாஸ்ட் இந்தியாவில் டூ-வீலர் பிரிவிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது. வின்ஃபாஸ்ட் ஸ்கூட்டர்களின் வரிசையில் ஈவோ, கியோ மற்றும் கைனெட் ஆகிய மாடல்களை அடிப்படையாகக் கொண்ட இ-ஸ்கூட்டர்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அப்படியே நமது நாட்டிற்கு வராவிட்டாலும், நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு தெளிவான யோசனையைத் தருகின்றன. 

    இந்திய வாடிக்கையாளர்களுக்கும், நமது சாலை சூழ்நிலைகளுக்கும் ஏற்ப இவற்றின் டிசைன், ஹார்டுவேர் மற்றும் ஸ்பெசிபிகேஷன்களில் தேவையான மாற்றங்களைச் செய்து வின்ஃபாஸ்ட் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர்கள் 2027 மார்ச் மாதத்திலேயே இந்தியாவிற்கு வரக்கூடும், அல்லது சற்று தாமதமாகவும் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

    வின்ஃபாஸ்ட் ஈவோ: ஆரம்ப நிலை மாடல்

    இந்தியாவில் அந்த பிராண்டின் ஆரம்ப நிலை எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான அடிப்படையாக வின்ஃபாஸ்ட் ஈவோ இருக்கக்கூடும். இதன் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1 லட்சமாக இருக்கும். வியட்நாமில், இந்த ஸ்கூட்டர் மிகவும் வழக்கமான டிசைனைக் கொண்டுள்ளதுடன், தினசரிப் பயன்பாட்டிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஸ்டைலிங் மற்றும் உபகரணங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும், இந்திய மாடலிலும் வின்ஃபாஸ்ட் இதே நடைமுறை அணுகுமுறையைத் தக்கவைத்துக் கொள்ளும் என நாம் எதிர்பார்க்கலாம்.

    VinFast Evo

    வியட்நாம்-ஸ்பெக் ஈவோ ஸ்கூட்டர், 2.45 kW பீக் பவரை உற்பத்தி செய்யும் ஹப்-மவுண்டட் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 70 கி.மீ டாப் ஸ்பீடு செல்லும் என்றும், இரண்டு ரிமூவபிள் பேட்டரிகளுடன் 165 கி.மீ ரேஞ்சைத் தரும் என்றும் நிறுவனம் கூறுகிறது. இதில் LFP பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது; ஒவ்வொரு பேட்டரியும் 1.5 kWh திறன் கொண்டது. 65 கிலோ எடையுள்ள ரைடருடன் 0-50 kmph வேகத்தை இந்த ஸ்கூட்டர் 16 வினாடிகளில் எட்டும் என வின்ஃபாஸ்ட் கூறுகிறது. நகரப் பயணங்களுக்கு இந்த டாப் ஸ்பீடு போதுமானதை விட அதிகமாக இருந்தாலும், வேகமெடுக்கும் திறன் இதன் பலமாக இருக்காது.

    VinFast Evo Underseat Storage

    வசதிகளைப் பொறுத்தவரை ஈவோ ஸ்கூட்டரில் LCD கன்சோல் மற்றும் இரண்டு பேட்டரிகளும் பொருத்தப்பட்ட நிலையில் 12 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் இடவசதி ஆகியவை உள்ளன.

    வின்ஃபாஸ்ட் கியோ: ஸ்போர்ட்டி தோற்றமுடைய கம்யூட்டர்

    ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை வின்ஃபாஸ்ட் கியோ சற்று வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளுகிறது. வழக்கமான ஈவோவைப் போலல்லாமல் கியோ சற்று ஸ்போர்ட்டியான டிசைனைப் பெற்றுள்ளது. முன்பக்கம் ஈவோவைப் போலவே தோற்றமளித்தாலும் பக்கவாட்டு மற்றும் பின்புறத் தோற்றங்கள் இதில் சற்று மாற்றத்தைக் கொண்டு வருகின்றன.

    VinFast Kyo

    கியோ ஸ்கூட்டரும் ஏறக்குறைய ஈவோவைப் போன்ற ஸ்பெசிபிகேஷன்களையே கொண்டுள்ளது. இதிலும் அதே திறன் கொண்ட இரண்டு ரிமூவபிள் பேட்டரிகள் உள்ளன; இருப்பினும் ரேஞ்ச் 5 கி.மீ குறைந்துள்ளது. 3 kW பீக் பவரை உற்பத்தி செய்யும் இன்-ஹப் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இது இயக்கப்படுகிறது. இதன் டாப் ஸ்பீடு 70 kmph ஆகவும், பிக்கப் ஈவோவைப் போலவேவும் உள்ளது.

    சுவாரசியமாக ஒவ்வொரு பேட்டரியும் சுமார் 12 கிலோ எடை கொண்டது. இந்திய மார்க்கெட்டிற்கு வின்ஃபாஸ்ட் மிகவும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய விஷயம் இது. ரிமூவபிள் பேட்டரிகள் என்பது கேட்பதற்கு சௌகரியமாக இருந்தாலும், பார்க்கிங் இடத்திலிருந்து அபார்ட்மெண்ட் அல்லது அலுவலகத்திற்கு 12 கிலோ எடையுள்ள பேட்டரியைத் தூக்கிச் செல்வது சிரமமாக இருக்கலாம். குறிப்பாக வயதான ரைடர்கள் அல்லது மாடிகளில் வசிப்பவர்களுக்கு இது கடினமாக இருக்கும்.

    VinFast Kyo Rear Profile

    கியோ ஸ்கூட்டரில் 21-லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் வசதி, TFT கன்சோல், ஸ்மார்ட் கீ சிஸ்டம் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர்களுடன் கூடிய வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க் ஆகியவை உள்ளன.

    வின்ஃபாஸ்ட் கைனெட்: மிகவும் ஸ்போர்ட்டியான மாடல்

    இந்த மூன்று ஸ்கூட்டர்களிலும் மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட ஸ்கூட்டர் வின்ஃபாஸ்ட் கைனெட் ஆகும். இது கூர்மையான ஸ்டைலிங் மற்றும் மிகவும் ஆக்ரோஷமான முன்பக்க டிசைனைப் பெற்றுள்ளது. மேலும் 14-இன்ச் வீல்களில் பயணிக்கும் இது, கம்பீரமான தோற்றத்தைத் தரும் அகலமான ரியர் டயரையும் கொண்டுள்ளது.

    VinFast Kinet

    எளிமையான டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கியோவைப் போலல்லாமல் சற்று ஸ்போர்ட்டியான உணர்வை விரும்பும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து கைனெட் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வரிசையில் உள்ள மற்ற ஸ்கூட்டர்களைப் போலவே, கைனெட் மாடலிலும் ரிமூவபிள் பேட்டரிகள் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் ஆதரவு உள்ளது. இந்தியா-ஸ்பெக் வெர்ஷன் தோற்றத்தில் கணிசமாக வேறுபடக்கூடும் என்றாலும், வின்ஃபாஸ்டின் பிரீமியம் மாடலிலிருந்து நாம் என்ன பெர்ஃபார்மன்ஸ் மற்றும் உபகரணங்களை எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு தெளிவான படத்தை வியட்நாம் மாடல் தருகிறது.

    VinFast Kinet

    வியட்நாம்-ஸ்பெக் கைனெட் ஸ்கூட்டர் அதிக சக்திவாய்ந்த 5,200 W பீக்-அவுட்புட் மோட்டார், 90 kmph டாப் ஸ்பீடு மற்றும் இரண்டு 1.5 kWh LFP பேட்டரிகளுடன் 145 கி.மீ ரேஞ்சைப் பெற்றுள்ளது. இதில் 22-லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் இடவசதியும் உள்ளது. இதன் பிக்கப்பும் மிக வேகமாக உள்ளது; 0-50 kmph வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடும் என நிறுவனம் கூறுகிறது.

    சுமார் ரூ.1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற எதிர்பார்க்கப்படும் விலையில், பெர்ஃபார்மன்ஸ், வசதிகள், ரேஞ்ச் மற்றும் பயன்பாட்டு சௌகரியம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பேக்கேஜாக இது இருக்க வேண்டும்.

    பைக்தேக்கோ சொல்வது

    வின்ஃபாஸ்டின் வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பற்றிய மிகப்பெரிய பேசுபொருள் அவற்றின் டிசைன், பெர்ஃபார்மன்ஸ் அல்லது வசதிகள் அல்ல. அவற்றின் ரிமூவபிள் பேட்டரி தொழில்நுட்பமும், பரவலான பேட்டரி-ஸ்வாப்பிங் கட்டமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளும்தான்.

    காகித அளவில் இது ஒரு அற்புதமான தீர்வாகும். பேட்டரி சார்ஜ் ஏறுவதற்காகப் பல மணி நேரம் காத்திருப்பதற்குப் பதிலாக, உரிமையாளர்கள் எளிதாக ஒரு ஸ்வாப்பிங் நிலையத்திற்குச் சென்று, சார்ஜ் தீர்ந்த பேட்டரியைக் கொடுத்துவிட்டு முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை மாற்றிக்கொண்டு பயணத்தைத் தொடரலாம். வீட்டிலேயே சார்ஜிங் பாயிண்ட் வசதி உள்ளவர்கள் பேட்டரியைக் கழற்றி வீட்டிற்குள்ளேயே சார்ஜ் செய்து கொள்ளவும் முடியும்.

    ஆனால் இந்திய மார்க்கெட் முற்றிலும் மாறுபட்டது. வின்ஃபாஸ்ட் தனது வியட்நாம் வியூகத்தை அப்படியே இங்கே நகலெடுத்து அதே முடிவுகளை எதிர்பார்க்க முடியாது.

    போட்டியான விலை நிர்ணயம், மலிவு விலையில் பேட்டரி-ஸ்வாப்பிங் சந்தாக்கள் மற்றும் ஸ்வாப்பிங் நிலையங்களின் பரவலான கிடைக்கும் தன்மை ஆகிய மூன்று விஷயங்களை நிறுவனம் சரியாகச் செய்ய வேண்டும். வீட்டிலேயே சார்ஜ் செய்யும் ரிமூவபிள் பேட்டரிகளைப் பொறுத்தவரை, பேட்டரிகள் கையாளுவதற்கு எளிதாக இருப்பதையும், தேவையற்ற சிக்கல்கள் இல்லாமல் வாடிக்கையாளர்கள் அவற்றை சார்ஜ் செய்யும் வசதியையும் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.

    இறுதியில் வின்ஃபாஸ்ட் மூன்று சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் அறிமுகப்படுத்தாமல் ஒரு முழுமையான பேட்டரி கட்டமைப்பையும் சேர்த்து வழங்க வேண்டியிருக்கும். ஈவோ, கியோ மற்றும் கைனெட் ஆகியவை அந்த பிராண்ட் இந்தியாவிற்கு என்ன கொண்டு வரக்கூடும் என்பதற்கான ஒரு முன்னோட்டத்தைத் தருகின்றன. ஆனால் இறுதித் தயாரிப்புகள் நமது மார்க்கெட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட வேண்டும்.

    பரவலான நெட்வொர்க் இல்லாமல் இந்தியாவில் பேட்டரி ஸ்வாப்பிங்கை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை ஆக்டிவா இ மூலம் ஹோண்டா பெற்ற அனுபவம் ஏற்கனவே காட்டியுள்ளது. ஹோண்டா தடுமாறிய இடத்தில் வின்ஃபாஸ்டால் வெற்றி பெற முடியுமா? இந்திய வாடிக்கையாளர்களை அது எவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறது என்பதையும், மிக முக்கியமாக, தனது ஸ்கூட்டர்களுக்கு ஆதரவாக சார்ஜிங் மற்றும் ஸ்வாப்பிங் உள்கட்டமைப்பை எவ்வளவு சிறப்பாக உருவாக்குகிறது என்பதையும் பொறுத்தே அது அமையும்.

    Topics mentioned in the article
    Was this article helpful ?

    Amey
    Correspondent
    Amey is a Correspondent with the CarDekho Group and has been an automotive journalist for over 3 years. A business graduate by paper but an automotive enthusiast by heart, Amey.....Read more

    Write your Comment

    Read Full News

    Two Wheelers News

    • Trending
    • Recent

    Trending Bikes

    • Popular
    • Upcoming
    *Ex-showroom price in Delhi
    ×
    We need your city to customize your experience